பக்கம்:பாலைப்புறா.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 341

கணவனுக்காகவும், ஒரே சமயத்தில் துடித்தது. பிள்ளைத்தாச்சியான மீரா, எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றாள். மோகன்ராம், முகத்தில் ஈயாடாமல், ஒரு பனைஒலையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயத்தில், ஒரு பனையேறி வந்தார். அர்ச்சுனன் வைத்திருந்த அம்பராத்துணி மாதிரி ஒரு பாளைக்குடுவை... அதில் ஒரு பாளை அரிவாள். தோளில் தொங்கும் கலசங்கள். மனோகரைப் பார்த்துவிட்டு, மனங்கேளாமல் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது பார்த்து, கட்டாந்தரையில் துண்டைப் போட்டு உட்கார்ந்திருந்த தவசிமுத்து எச்சரித்தார்.

‘ஏலே. மாடக்கண்ணு...முறைப்பயனியை சரியா ஊத்தாட்டா... நான் ஆளமாற்ற வேண்டியதிருக்கும்.’

  • *

‘'எதுக்குலதுப்புறே...?”

‘நீரு சொன்ன சொல்லு, காது வழியாய் வாய்க்குள்ளே போய் வெளியிலே விழுது...து. இந்தச்சமயத்திலயா... அந்த பேச்சு...?”

தவசிமுத்து, மாடக்கண்ணுவை சாடப் போனார்.தகாத வார்த்தைகளால் விமர்சிக்க போனார். அதற்குள், மருமகன் மோகன்ராம் கத்தினார்.

‘யார் யாருக்கோ... எய்ட்ஸ் வருது... வரவேண்டிய முடிச்சுமாறிகளுக்கு வரமாட்டக்கு.. பாரு... துர’

தவசிமுத்து, எச்சில் பட்டதுபோல், வேட்டி முனையால் முகத்தைத் துடைத்த போது, ஆங்காங்கே, சும்மாக்காட்டில் அல்லாடிவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய விவசாயிகள், அந்த பக்கமாய் வந்தார்கள். இதற்குள், சாவு விழுந்திருக்கும் என்ற அனுமானத்தில், ஊரில் இருந்தும் பலர்துஷ்டிகேட்க வந்திருந்தார்கள். என்ன இந்த மனோகர். சட்டுப்புட்டுன்னு போகாமல்... கூட்டத்தினர் சிறிது விலகியே நின்றனர். காற்றடிக்காத திசையாய் சில புத்திசாலிகள் போனபோது, கூட்டமும் அங்கே போனது.

மனோகரைப் போல், பகலும் செத்துக் கொண்டிருந்தது. சூரியன், மேற்குபக்க சமாதியில் இறங்கிக் கொண்டிருந்தான். ஆகாய அடிவார புதைகுழிக்குள் சுருங்கப் போனான். சுடுகாட்டில் ஒரு பிணப் புகைச்சல்! அதே காட்டில் இன்னொரு பக்கம், இரும்புக் கம்பியோடும், மண் வெட்டியோடும் இரண்டு வெட்டியான்கள் ஆகாயத்தில் கழுகுகள் வட்டமடித்தன. பிணங் கொத்தி அண்டங்காக்கைகள் கரைந்தன. பக்கத்து செளக்குத் தோப்பில், நரிகள் ஊளையிட்டன, தூரத்து சோளச் செடிகள் கதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/341&oldid=635799" இலிருந்து மீள்விக்கப்பட்டது