பக்கம்:பாலைப்புறா.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 பாலைப்புறா

கதிராய் வளைந்து வளைந்து மாரடித்தன. எருக்கலைச் செடிகள், இடுக்கிய கண்கள் போன்ற ஒடுங்கிப் போன பூக்களோடு முட்டி மோதின. மேலே ஒரு பனையில் சட்டிக் கலசத்தில், ஒரு கரிச்சான் குருவி விழுந்து, மாலைப் பதநீருக்குள் சிக்கி, மேலே ஏற முடியாமல் கதறிக் கொண்டிருந்தது.

அந்த விடிலியையும் தள்ளி வைத்ததுபோல் நின்ற கூட்டத்தில், பெரும் பகுதியினர், மனோகருக்காக மனவருத்தப்பட்டார்கள். அதிகமாய் பேசாதவன். ஆனால் பல் தெரியச்சிரிப்பவன். கேட்ட கேள்விக்கு, போகிற போக்கில் பேசாமல், நின்று நிதானித்து பதிலளிப்பவன், ஒங்கபிள்ளைகளை நல்லா படிக்க வையுங்க... மீதியை நான் பார்த்துக்குவேன்’ என்று வலியச் சொல்பவன். ‘வண்டிக்கார மூக்கையா சத்தம் போட்டே கத்தினார். ‘என்னய்யா அநியாயம்.. ? இந்த ஆண்டவனுக்கு யாருய்யா புத்தி சொல்றது?”

அங்கு நின்றவர்கள் நிமிர்ந்தார்கள். இடம் கொடுப்பது போல், சிறிது விலகி நின்றார்கள். ஓடிவந்த ஜீப்பையும், அதன்பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வேனையும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். அதற்குள் அசோகனும் சந்திராவும், அந்த வேனில் முன் பக்கம் இருந்தும், ஒரு பச்சைச் சேலை நர்சும், எய்ட்ஸ் வார்டு ஆயாவும், அவள் மகனும் பின் பக்கம் இருந்தும் கீழே இறங்கினார்கள். இதே போல ஜீப்பின் பின்பக்கம் இருந்து, வாடாப்பூவும் எஸ்தரும், காமாட்சியோடு இறங்கினார்கள். முன்பக்க இருக்கையில் இருந்த கலைவாணி, மெள்ள இறங்கி, தரைதட்டி நின்றாள்.

இதற்குள், உள்ளே ஒடிப்போய், மனோகரைப் பார்வையிட்ட அசோகன் வெளியே வந்து, ஆணைக்குரலில் பேசினான்.

‘சந்திரா, ஏன் கிளவ்ஸ் போடாம நிற்கே... இந்தாப்பா.. பேண்டேஜ் துணிகளை எடு... போதாது. நிறைய தேவைப்படும்... பார்வதி ஸ்கிரீனை எடு. பிளிச்சிங் பவுடர் என்னாச்சு...? கமான். இருட்டுறதுக்குள்ள எடுத்துப் போயிடணும்... வாஸ்லினை எடுங்க...”

அசோகனோடு, சந்திராவும் உள்ளே ஓடினாள். வார்டு பையன், கண்கண்ணாய் காட்டும் பேண்டேஜ் துணிகளை எடுத்துக் கொண்டு, வேகவேகமாய் உள்ளே போனான். அவன் தாய்க்காரியான ஆயா, ஒரு பெட்டியைத் தூக்கி கொண்டு, உள்ளே ஓடினாள்.

அப்படியே நிலைகுலைந்து நின்ற கலைவாணியை, வாடாப்பூ, பிடித்துக் கொண்டு மருவினாள். எஸ்தர், அவள் கையைப் பிடித்து, முன் பக்கமாய் இழுத்தாள். காமாட்சி, அவள் காதில் ஏதோ பேசினாள். பாம்படக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/342&oldid=635800" இலிருந்து மீள்விக்கப்பட்டது