பக்கம்:பாலைப்புறா.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 பாலைப்புறா

‘குனிந்த தலைநிமிராத என் மகனை இப்படிஆக்கிட்டியேடி... பாவி... எவன் கிட்டல்லாமோ படுத்து... என் பிள்ளைய படுக்க வச்சுட்டியேடி. சண்டாளி. கைகேயி... கூனி... இப்போ... ஒனக்கு திருப்திதானாடி... சந்தோஷந் தானாடி...? இங்க எதுக்குடி வந்தே? வெளில போடி.. கல்யாணத்திற்கு முன்னால... எவன்... எவனுக்கு முந்தானை விரிச்சியோ... அவனவன் கிட்ட போடி... உனக்கு என்னடி இங்கவேல?”

எதிர்பாராத இந்தத் தாக்குதலால், உள்ளே நின்ற எல்லோருமே பிரமித்துப் போனார்கள். எஸ்தர் மட்டும், சீதாலட்சுமியின் இடுப்பை நோக்கி காலைத்துக்கினாள்... காமாட்சி பிடிக்கவில்லையானால், கிழவி இந்நேரம் கீழே விழுந்திருப்பாள். ஆனாலும் கலைவாணி, பழைய மாமியார்க்காரி சொன்னதை காதில் வாங்காதது போல், நின்றாள்...அசைவற்று நின்றாள்.

திடீரென்று, மனோகரிடம் இருந்து இன்னுமொரு சத்தம்... மற்றொரு சமிக்ஞை... கண்கள் அம்மா மீதும், கலைவாணி மீதும் மாறி மாறி நிலை கொள்ள, தாறுமாறாய்ப் பேசினான்.

‘அம்... அம்... நான் ..தான் தப்... தப்... கலை... இல்... இல்..’

மனோகர் சொன்ன சொல்லுக்கு படம் வரைவது போல, வலதுகையைத் தூக்க முடியாமல் தூக்கி, மறுப்பு தெரிவிப்பது போல் ஆட்டினான். பிறகு அதே கையை, தனது மார்பில் தட்டி நான்... நான். தப்... தப்...’ என்றான். கவைாணியைப் பார்த்து, அந்த ஒற்றைக் கைவிரல்களைக் கும்பிடுவது போல் ஒன்று திரட்டி ‘மன்... மன்...’ என்றான்.

கலைவாணி, அவன் மீது அப்படியே விழப் போனாள். கரங்களை, அவன் பக்கமாய் வீசினாள். அவள் கண்ணிர், மனோகருக்கு பால் வார்த்தது போல், அவன் வாயில் விழுந்தது. கீழே விழப் போனவளை, காமாட்சி தாங்கிக் கொண்டாள். வாடாப்பூ, கண்ணிரும் கம்பலையுமாய் பிடித்துக் கொண்டாள். எஸ்தர்தான், அவளைதள்ளிக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே, மனைவி உட்கார்ந்த கருங்கல்லில் இடம் மாறி இருந்து, உள்ளே கண்களைஊசலாடவிட்டதவசிமுத்து, கலைவாணியைக் கண்டதும் சாடை மாடையாகப் பேசினார்.

‘'நல்லாத்தான் ஜாலம் போடுறாளுவ... புருஷன் இறந்தால்... பொண்டாட்டி வாரிசுன்னு சட்டம் இருக்குல்லா... அதை வச்சி சொத்தை அமுக்க வந்திருக்காளுவ... இது நானாய் உழச்சி சம்பாதிச்ச சொத்து; ஒருத்திக்கும் உரிமை இல்லை...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/344&oldid=635802" இலிருந்து மீள்விக்கப்பட்டது