பக்கம்:பாலைப்புறா.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 345

எஸ்தர், ஏதோ கோபமாகப் பேசப் போனாள். கையைக் கூட ஓங்கிவிட்டாள். அதற்குள், ஆளுக்கு ஆள்தவசிமுத்துவை உலுக்கினார்கள், தூரநின்றே திட்டினார்கள்.

‘உழைச்சி சம்பாரிச்ச சொத்து... தெரியாதாக்கும். ஒம்ம மகன் பேரைச் சொல்லி வாங்கின கமிஷன் சொத்து. ஏழைப்பாளைகளுக்கு அநியாய வட்டியாய் கடன் கொடுத்து அமுக்கிப் போட்ட சொத்து’

எல்லோரும் திட்டி முடிக்கட்டும் என்பது போல், காத்திருந்த மோகன்ராம்துள்ளி வந்தார்;

‘இனிமேல்... என் தங்கச்சியைப் பற்றி எதாவது பேச்சு வந்தால், அப்புறம் நான் கொலைகாரனாயிடுவேன். புருஷன் சொத்து பொண்டாட்டிக்குத்தான் வரும். இதில என்ன சந்தேகம்...’

மூத்தமகள் சகுந்தலா, கணவனைக் கடிந்தாள்.

‘எங்கப்பாவை... ரொம்பத்தான் திட்டுறீக... புருஷன்கிட்ட வாழாதவளுக்கு சொத்து எப்படிக் கிடைக்கும்...?”

‘எங்க அக்கா சொல்றதுதான் சரி’

‘எம்மா... நீங்களே சொத்தை அமுக்குங்க... மவராசியா தின்னுங்க. கலைவாணியம்மா கேட்கமாட்டவ...’

‘ஒனக்கென்ன வந்துட்டு மூக்கையா...”

‘எனக்கா... ஒங்களைப் பார்த்த பிறவும், எதுவும் வரலியேன்னுதான் வருத்தப்படுறேன். மீராம்மா... பொம்பளையாமா. நீங்க... எந்த இடத்தில என்ன பேசறதுன்னு தெரியாண்டாம்...?”

கலைவாணி, காதுகளைப் பொத்திக் கொண்டாள். இந்த மாதிரி நடக்கலாம் என்று எதிர் பார்த்து, பங்காளி பலத்தோடு அப்போது பார்த்து ஒடிவந்த அப்பாசுப்பையாவைப் பார்த்ததும், அவரை, கண்களால்தடுத்தாள். இதற்குள், உள்ளே நின்ற சீதாலட்சுமி வெளியே வந்து, கவைாணியின் பக்கத்திலேயே நின்றாள்... அவளைப் பார்த்துப் பார்த்துக் கைகளைப் பிசைந்தாள். கலைவாணி நகரும் பக்கமெல்லாம் நகர்ந்தாள். அவள் முன்னால் போய் நிற்பதும், ஏறிட்டு ஏறிட்டுப் பார்ப்பதுமாய் நின்றாள். வாய் கெஞ்சுவது போல் அசைபோட்டது.தலைகுனிந்தும், நிமிர்ந்தும் இயங்கியது. கால்கள் நிற்கும் போது, தரையில் கோடுகள் போட்டன. ஒரு கட்டத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/345&oldid=635803" இலிருந்து மீள்விக்கப்பட்டது