பக்கம்:பாலைப்புறா.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 347

உன்னிதுதானே...?”

‘இந்தப் பய மவள்... என்னென்னமோ பேசுறாள். யாருமே தட்டிக்கேட்க மாட்டக்கியளே...”

“தட்டுறதாய் இருந்தால், ஒம்மத்தான்தட்டணும்...’

இதற்குள், குடிசைத்திரை விலக்கப்பட்டது. மனோகர் என்கிற பேண்டேஜ் உருவம், துணிக்கட்டிலில் தூக்கிவரப்பட்டது. அவன் கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தது. அந்தக் கட்டிலை ஆம்புலன்சில் வைத்தபோது, கலைவாணி, ஏங்கினாள்; சீதாலட்சுமி அலை மோதினாள். கீழே விழுந்தாள். மேலே எழுந்தாள்... சகுந்தலா, மீரா ஆகியோர் இரு பக்கமும் பிடித்துக் கொண்டாலும், அவள் குனிந்து குனிந்து எழுந்து காவடி போல் சுழன்றாள்.

‘என் செல்வமே... மேல் லோகத்தில போய் இருடா...! அங்கிருந்து எங்கேயும் போயிடதடா... இந்த அம்மா... சீக்கிரமா வந்துடுறேன்டா... அய்யோ... என்எஞ்ஜினியருமவனே... நான் செத்து, நீ இருக்கப்படாதா...?”

இதற்குள், ஆம்புலன்ஸ் வண்டி புறப்படப் போனது. அசோகனும், சந்திராவும் முன்னிருக்கையில் உட்கார்ந்தார்கள். வாடாப்பூ, அந்த வேனை வழிமறிப்பது போல் நின்று கொண்டு, கெஞ்சினாள்.

‘என் வீட்டு மொட்டயனுக்கும் இந்த நோய்தான்... அந்த கரி முடிவானையும் தூக்கிட்டுப் போங்கய்யா... வீட்லதான் கிடக்கான்...’

‘சரி... பின்னால ஏறிக்கோ’

ஊரார்திகைத்தார்கள்... லாரிக்கார மாரியப்பனுக்கும் இந்த நோயா...? அடக்கடவுளே... ஊர்ல. எவனுக்கு இருக்கு, எவளுக்கு இல்லன்னு சொல்ல முடியாது போலுக்கே...’

ஆம்புலன்ஸ் வேன், ஊரைப்பார்த்து ஓடியது. மயக்கம் போட்டு விழுந்த சீதாலட்சுமியை, நான்குபேர் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம், மாரியப்பன் வீட்டைப் பார்த்து ஓடியது. சுப்பையா மட்டும், கலைவாணிக்காக காத்துநின்றார்.

மாருதி ஜீப்பில் சாய்ந்தபடிநின்ற கலைவாணி, காமாட்சி சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தாள்.அந்த மேட்டிற்குக் கீழே உள்ளஒரு பள்ளத்தில் நின்ற எஸ்தர், கலைவாணியைக் கையாட்டிக் கூப்பிட்டாள். உடனே இவளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/347&oldid=635805" இலிருந்து மீள்விக்கப்பட்டது