பக்கம்:பாலைப்புறா.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பாலைப்புறா

அங்கே ஒடிப் போய்க் கேட்டாள்.

‘என்னது எஸ்தர்...?”

‘நீ... என்பேரை... நினைவிலே வைத்திருக்கிறதுக்கு சந்தோஷம். இந்தா பி.டி...பெட்டிய திறந்துபாரு...’

எஸ்தர், ஜோல்னாப் பையில் உள்ள ஒரு மரப்பேழையை எடுத்து, கலைவாணியிடம் கொடுத்தாள். அதைத் திறந்த கலைவாணி, அதிசயித்தாள். அத்தனையும் தங்க நகைகள்... பெற்றோர் போட்ட நகைகள். வைர நெக்லஸ். தலைசுத்தி ஆரம்... இரட்டை வடச் செயின்.. ஒரு நகை கூட குறையவில்லை.

புரியாமல் பார்த்தவளுக்கு, எஸ்தர் புரிய வைத்தாள்.

‘மனோ... காசுக்கு வழியில்லாம எவ்வளவோ கஷ்டப்பட்டான். இந்த நகையை எப்படியும் வாங்கிடணுமுன்னு, போலீஸ்காரங்க... முட்டிக்கு முட்டி தட்டினாங்க. அந்தப் பாவிகளாலதான், இவன் பாதி செத்துட்டான். ஆனாலும், லாக்கர் இருந்த பேங்கை சொல்லல... அவனுக்கும் எனக்கும் எவ்வளவோ கஷ்டம். கம்பெனிப் பணம் தீர்ந்ததும், சொல்லத் தகாத மனிதர்கள் கிட்டே விரும்பத்தகாத உறவுகளை வச்சி சம்பாதிச்சான். நானும் அப்படித்தான். ஒரு கட்டத்தில், நானும் அவனும், பிச்சைகூட எடுத்தோம். படுக்கையிலே விழுந்தபோது, இதில ஒரு நகையை விற்று.. டாக்டர்கிட்ட காட்டலாமுன்னேன். என்னை அடிக்கவே வந்துட்டான். கலைவாணியைத் தொட்டு, என் நோயை அவளுக்கு கொடுத்திட்டேன். அவள் நகையையாவது தொடாமல் இருக்கேன்"னு, சிரிச்சான்... பிறகு அழுதான்...’

எஸ்தர், வாய்வழியாய் மூச்சுவிட்டாள். கலைவாணி, அவளை கண்களால்தட்டிக் கொடுத்த உற்சாகத்தில், மீண்டும் பேசினாள்.

‘'நானும் காலேஜ் படித்தவள்தான். ஆனாலும் பட்டம் வாங்கும் முன்னே, பீடா வாங்குனேன். பீடா, மாத்திரையாச்சு.. அப்புறம் அதுவே ஊசியாச்சு, சரி விடு... நான், நல்லவளாய் இல்லாட்டாலும், கெட்டவளாய் இல்லன்னு நினைக்கேன். மனோ... இந்த நகைப்பெட்டியை ஒன்கிட்ட ஒப்படைக்கச் சொன்னான். ஒன் ஆபீஸ்லேயே இந்தப் பெட்டியை, தான் கொடுத்திருந்தால், அது, ஒன்னோட இந்த வருகையை கொச்சைப்படுத்தி இருக்கும். அதனாலதான் இப்போ தாறேன்

‘இறுதியா... ஒன்று. கடைசிக் காலத்தில இந்த மனோவால எனக்கு எதுவும் ஆக வேண்டியது இல்ல. இவன் மட்டுமே, எனக்கு கீப்பும் இல்ல...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/348&oldid=635806" இலிருந்து மீள்விக்கப்பட்டது