பக்கம்:பாலைப்புறா.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 349

ஆனாலும், நான் அவனை விட்டு விலகல... அவனோட, இங்க வந்த பிறகு கூட, நான். நினைத்திருந்தால், இந்த நகைப் பெட்டியோட மெட்ராஸ்க்கு ஒடியிருக்கலாம். மதுரையைப் பார்த்து போயிருக்கலாம். இது, எனக்கு ஒரு வருட ஊசி மருந்து. மூன்று வருட பிராந்தி. ஆனாலும், நான் ஒடல. அதுதான் ஏன்னு எனக்கே புரியல...’

‘ஏன்னா... நீ மனுவி... மனுவிம்மா...’

இருவரும், ஒருத்தரை ஒருத்தர்அன்பொழுகப் பார்த்தார்கள். ஊனுருகத் துடித்தார்கள்... எஸ்தர்தொடர்ந்தாள்.

‘ஆரம்பத்தில... நான் ஒன்னைத் திட்டுனேன்... புருஷன. இப்படி விட்டுட்டுப் போயிட்டியேன்னு பொருமினேன்... ஆனால், எப்போ ஒருத்தன், ஒருத்தியை ஏமாற்றி தாலிகட்டுறானோ, அப்பவே அந்ததாலிக்கு மரியாதை இல்ல. இது ஒரு ஐரனி... அதுதான் முரண்பாடான விசித்திரம். மனோகிட்ட இருந்த பணத்தை கரக்குறதுக்குத்தான், நானும், அன்புமணி என்கிற போக்கிரியும் திட்டம் போட்டு பழகுனோம். கடைசியிலே ஏமாற்றப் போன நான். இவன்கிட்ட ஒன்றிட்டேன். ஒன்னை. ஏமாற்றி தாலிகட்டின மனோ, ஒன்கிட்டயே ஒன்றிட்டான். வாழ்க்கை நேர் கோடுலயே போகாதோ... எப்படியோ வாழ்க்கை நம்மை சுமக்கிறதுக்குப் பதிலாய்... அதை நாம சுமக்க வேண்டியதாய் போயிற்று... முடியுமானால், இருநூறு ரூபாய் கொடு.”

‘'எதுக்கு?”

‘மெட்ராஸ் போகத்தான். கள்ள டிக்கட்டுல போய் கண்டுபிடித்தால், ஒன்று என்னை முட்டிக்கு முட்டி வாங்குவான். இல்லாவிட்டால், பிடிக்கிறவனுக்கு எய்ட்ஸ் வரும். நான் சொல்றது புரியுதா...?”

எஸ்தர், கண்ணைச் சிமிட்டினாள். முகமெங்கும் பருத்துப் போன பருக்கள். கண்களுக்கு, கீழே கருமேகத் திட்டுக்கள். காதோரம் செம்படைகள்... உடைக்குமேல் இப்படியென்றால் உடைக்குள்ளே எப்படியோ...?

கலைவாணி, அவளைப் பார்த்து படபடப்பாய் கேட்டாள்.

“எஸ்தர்... நானும் மனுவியா...?’

‘என்ன பேச்சு பேசிட்டே...? நீ மனுவி இல்ல. மகா மனுவி. செந்தமிழில் சொல்லப் போனால், சிறியன சிந்தியாதாள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/349&oldid=635807" இலிருந்து மீள்விக்கப்பட்டது