பக்கம்:பாலைப்புறா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 பாலைப்புறா

வாடாப்பூவுக்கும், கணவன், அசல் அர்ச்சுனன் மாதிரியே தெரிந்தது. ஊருக்குள்ள மட்டுமா, இருக்குது. லாரில இந்தியா முழுசும் சுத்துற மனுஷராச்சே, படுவாமனுஷன்’

மேடம் நிச்சில், மேடை ஏறி, அலங்கார நாற்காலியில் உட்கார்ந்தாள். வெளிநாட்டுக்காரி என்றதும், வெள்ளைக்காரியை எதிர்பார்த்த கூட்டம், ஆரம்பத்தில், இந்த கறுப்புக்காரியை கேலியாகப் பார்த்தது. நிசந்தான், ஆனால் இப்போதோ, அவளோடு ஒன்றிவிட்டது.

இதற்குள், மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சுகுமார், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சந்திரா, முஸ்தபா சகிதமாய் கோபுர முத்திரை போட்ட காரில் வந்தார். லேட்டாக வந்ததற்கு கூச்சப்பட்டு, மேடைப்பக்கமே நின்றார். அவரை வரவேற்பதற்காக கீழே இறங்கிய கலைவாணி, அவரை மேடைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்குமிங்குமாய் அலைந்தாள். குத்து விளக்கு கொண்டு வரப் போன மீராவைக் காணவில்லை. இந்த அமர்க்களத்தில் விளக்கு மறந்து விட்டது.

சிறிது தூரம், மீராவைத் தேடி அலைந்தவள் கண்ணில், எதிர்காலக் கணவன் மனோகர் எதிர்ப்பாட்டான்.

"எப்போவந்தீங்க... வாங்க முன்னால வந்து உட்காருங்க”

“நோதேங்க்ஸ் எங்க நிற்கணுமுன்னு எனக்குத் தெரியும். நீங்க பிஸி ஒங்க வேலையைப் பாருங்க..."

ஒரு தேவதையாய் துள்ளிய கலைவாணி, பேயறைந்தவள் போல் ஆகிவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/38&oldid=1404984" இலிருந்து மீள்விக்கப்பட்டது