பக்கம்:பாலைப்புறா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 59

“ஐ அம் ஸாரி... மனோகர் ஒங்களுக்கு வந்தது, கலைவாணிக்கும் வந்துடப்படாது பாருங்க. அதனாலதான் சொன்னேன். ஊருக்குப் போன உடனேயே கல்யாணத்தை நிறுத்திடுங்க..."

‘பார்க்கலாம்’.

"இப்படி பட்டும் படாமலும் சொன்னால் எப்படி? உங்க காலுல விழுந்து கேட்கிறதாய் நினைத்து, ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுங்க”

"என்ன வாழ்க்கை... ஊர் ஊராய்ச்சுற்றுகிற வாழ்க்கையா...? தானைத் தலைவியாய் ஆகிற வாழ்க்கையா?”

டாக்டர் சந்திராவுக்கும், இப்போது கோபம் வந்து விட்டது. பேச்சின் போக்கே சரி இல்லையே... எச்சரித்தாள்.

'லுக் மிஸ்டர் மனோகர் நீங்களா, இந்தக் கல்யாணத்தை நிறுத்தினால், ஒங்க கெளரவத்துக்கு நல்லது. இல்லாவிட்டால், நானே அதை நிறுத்திக் காட்டுவேன். எதிர்கால எய்ட்ஸ் நோயாளிக்கு, ஒரு அப்பாவிப் பெண் கழுத்தில் தாலிகட்ட உரிமை இல்லை’

மனோகருக்குப் பதிலாய், அவன் மோட்டார் பைக் தான் பதில் சொன்னது- காட்டுக்கத்தலாய் ஆவேசப்பாய்ச்சலாய்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/59&oldid=1405020" இலிருந்து மீள்விக்கப்பட்டது