பக்கம்:பாலைப்புறா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 69

"சரி நாடி பாருங்க...”

"என்னடா இது... சுக்கு கண்ட இடத்தில பிள்ளை பெறுறது. சுப்பிரமணிசுவாமி கோவிலை பார்த்தாமட்டும் சாமி கும்புடுறவன் மாதிரி, நேரம் காலம் இல்லையா?”

‘இப்படிச்சொல்லிச்சொல்லியே எம்.பி.பி.எஸ். காரங்களை செழிக்க வச்சிட்டிங்க மாமா... நாடி பாருங்க மாமா’.

"இவனுக்கா... கூடாதுடா... இவன் அப்பன் அந்த இரப்பாளி தவசிமுத்து இங்கே வந்து... இவனுக்கும், சுப்பையா மகளுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்தான். பார்த்து முடிச்சதும் ரெண்டு ரூபாய் தந்தான் இரப்பாளிப்பயல். அங்கேயே கிழிச்சுப்போட்டேன்.”

‘என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே’.

"நீ அப்பவே... வெள்ளையன்பட்டிக்கு அரிவாள தூக்கிட்டுப் போவியே”.

‘ஏய் மாப்பிள்ளை மாமா கிட்ட கைய நீட்டு... அப்படியே வேற எதுவும் இருக்குதான்னும் பாரும் மாமா’.

பேச்சிமுத்து... மனோகரின் கை கால்களை உதறச் சொன்னார். இடுப்பிலோ, தரையிலோ கை ஊன்றாமல் இருக்கச் சொன்னார். பிறகு நாடி பார்த்தார். ஒரு நிமிடத்தில் பிடித்த கையை உதறிப் போட்டார். மனோகரும், மோகன்ராமும் பயந்து விட்டார்கள். பேச்சிமுத்து தாத்தா சிரித்தார்.

‘நல்லா இருக்கிறவனுக்கு நாடிப் பார்க்கப்படாதடா... வாத, பித்த சிலேத்தம் மூணு நாடியுமே நல்லா பேசுது... ஒரு நோய் நொடி இல்ல... பித்தம் ஜாஸ்தி’.

‘பீர் குடிச்சால் சரியாயிடும். அப்புறம், தாது புஷ்டிக்கு லேகியம்’.

"இப்பவே... இவனைதாக்குப்பிடிக்கிறது அவளுக்கு கஷ்டம்...” ‘அப்புறம் கல்யாண பொருத்தம்... எப்படி மாமா இருக்குது’. "ரெண்டு பேருக்குமே... களஸ்திர ஸ்தானம் நல்லாயிருக்குதுடா. எண்பது வயசுவரைக்கும் தீர்க்காயுசு. லூப்போ, கீப்போ போட்டாலும் ஐந்து பிள்ளைங்க பிறக்கும். நான் சொன்னது மாதிரியே... ராமக்கா பிழைச்சிட்டாள் பார்த்தியா... டாக்டர் பயலுவ, அவள சவக்கிடங்குக்கு தூக்கிட்டுப் போனாங்க.”

‘ஏன் மாப்பிள்ளை வாயைப் பிளக்கிற? எங்க மாமா சொன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/69&oldid=1405032" இலிருந்து மீள்விக்கப்பட்டது