பக்கம்:பாலைப்புறா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

அது வெறும் ஆரம்ப சுகாதார நிலையம் அல்ல. இந்த 'ஆரம்பம்’ என்ற வார்த்தைக்கு முன்னால், 'மேம்படுத்தப்பட்ட’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற சுகாதார நிலையங்களைப் போல் அல்லாமல், இதில் ஒரு பிரசவ வார்டும் பொதுப்படையான வார்டும் உண்டு. மொத்தம் இருபது படுக்கைகள் இருக்கலாம். கூடுதலான ஊழியர்களையும், இரண்டு டாக்டர்களுக்குப் பதிலாக, மூன்று டாக்டர்களையும் கொண்ட மையம்... வெளிநாட்டு உதவியோடு மேம்படுத்தப்பட்ட ஒரு சில மையங்களில் இந்தக் கோணச் சத்திர மையமும் ஒன்று... ஆனால் இதன் பெயர்ப் பலகையைப் பார்த்தால், அந்த நிலையத்திலேயே சுகாதாரம் இனிமேல்தான் ஆரம்பமாக வேண்டும் என்ற சந்தேகம் வரலாம்... வெளியே உளுத்துப் போன பலகையில், புழுத்துப் போன எழுத்துக்கள்... வண்டிச்சக்கர மேல்பட்டை மாதிரி வளைத்து வைக்கப்பட்ட இந்தப் பெயர் பலகைக்கு கீழே உள்ள வாசலில், நடந்தால் மைதானம் மாதிரியான வளாகம், பல கட்டிடச் சிதறல்கள்... நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்னால், ஏழெட்டுப் பெண்கள். இவர்களின் மத்தியில் ஒரு கதாநாயகி மாதிரி அழகான பெண்... சுற்றி நின்ற எக்ஸ்டிரா பெண்கள் ஒவ்வொருத்தியின் கையிலும் ஒரு ரிஜிஸ்டர்...

இவர்களைத் தாண்டி, அந்தக் கட்டிடத்தில் படியேறினால், அதன் முன் பக்கத்தில் ஒரு சுமாரான அறை... அதில் அதிகாரத் தோரணையில் உள்ள ஒரு வெட வெடத்தான். சுற்றி நின்ற நான்கைந்து பிள்ளைத்தாய்ச்சிகளையும், மூன்று கிழவர்களையும், இரண்டு மூதாட்டிகளையும், மற்ற நோயாளிக் கூட்டத்தில் இருந்து ஆட்டு மந்தை போல் தனிப்படுத்தி, அவர்களுக்கு, எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட அரசு முத்திரையிட்ட செவ்வக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/71&oldid=1405036" இலிருந்து மீள்விக்கப்பட்டது