பக்கம்:பாலைப்புறா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 பாலைப்புறா

காகிதங்களைக் கொடுக்காமல், விரட்டிக் கொண்டிருக்கிறான்.

‘ஒங்க சென்டர். இங்கே கிடையாது. துட்டாம்பட்டியில் இருக்குதே அது, அங்கே போங்க”.

“எங்களுக்கு என்ன இழவு தெரியும். ஏதோ வந்துட்டோம்”.

‘வந்தால் பார்த்துடனுமா... போப்போ...’

"அதெப்படி... இங்கே இருந்து மூணு கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற எங்களுக்கு.... இது கிடையாதுன்னா... பதினைஞ்சி கிலோ மீட்டர்ல இருக்கிற தட்டாம்பட்டி ஆஸ்பத்திரி எப்படி பொருத்தம்...?”

‘இந்த சட்டமெல்லாம் வேண்டாம். செங்கோட்டை கேரளாவுக்கு பக்கத்தில இருக்குது. அதனால புளியரை சென்டருக்கு போக முடியுமா? கல்கத்தா, பங்களாதேசத்துக்கு பக்கத்தில் இருக்குது. அதுக்காக கல்கத்தாக்காரன், பங்களாதேச ஆஸ்பத்திரிக்கு போக முடியுமா...? அப்படித்தான் இதுவும். இடத்தை காலி பண்ணுங்க. இன்றைக்கு நோய் தடுப்புநாள்... ஒங்க கிட்ட பதில் சொல்ல நேரமில்லை’

தனிப்படுத்தப்பட்ட அந்த மனிதக் கூட்டம், என்ன செய்யலாம் என்பது போல் யோசித்தது. எதாவது சத்தம் போட்டால், பக்கத்திலேயே ஒரு போலீஸ் ஸ்டேஷன்....அங்கிருந்து வந்த சிவப்புத் தொப்பிகள், இங்குள்ள இவனிடம் ஏதோ பேசிவிட்டு உள்ளே போனதை, இவர்களே பார்த்தவர்கள்... துட்டாம்பட்டி மையத்துக்கும் போய்ப் பார்த்தவர்கள். அங்கேயும் இதே மாதிரி ஒரு லொள் லொள்... கோணச்சத்திரம் கோணச்சத்திரம் என்று குலைத்தது.

உடம்பு முழுவதையும் கும்பிடு போடுவது போல் குழைந்து நின்ற இந்தக் கூட்டத்தைத் தண்டிப்போனால், ஒரு இடது பக்கம் நீண்ட நெடிய கூடம்; இரு பக்கமும், ஒன்றுக்குப் பின் ஒன்றாக பெஞ்சுகள்; இதனால் நடுப்பக்கம்... தானாகவே வழியானது. பெஞ்சுகளில் சீக்காளிகள்... தாய்க்காரிகள்... பிள்ளைத்தாச்சிகள், இவர்கள் எட்டிப் பார்க்கும் உள்ளறை விசாலமானது... மூன்று மேசைகள்; அவற்றிற்கு பின்னாலும் மூன்று நாற்காலிகள்... முன்னாள் முக்காலிகள்... நாற்காலிகளில் நடுவில் உள்ளதில் டாக்டர் முஸ்தபா....இடது பக்கம் டாக்டர் சந்திரா... மூன்றாவது நாற்காலி காலி... கைனக்காலஜிஸ்ட் எனப்படும் பிரசவ டாக்டர், வேலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள், ‘மெட்டர்னிடி விடுமுறைக்கு' போய்விட்டதாகக் கேள்வி. ஆங்காங்கே சுவர்களில் அரசுப் போஸ்டர்கள்; தடுப்பு ஊசி போட்டீங்களா... தட்டம்மை வராமல் பார்த்தீங்களா... என்பது மாதிரியான வண்ணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/72&oldid=1405037" இலிருந்து மீள்விக்கப்பட்டது