பக்கம்:பாலைப்புறா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 73

கலவைகள்.

முஸ்தபாவும், சந்திராவும், ஒருவருக்கு ஒருவர், இன்று வணக்கம் கூட போட்டுக் கொள்ளவில்லை. நேற்று டாக்டர் சந்திரா வாக்களித்தது போல் பத்து மணிக்கு வராமல் பதினொரு மணிக்கு வந்ததால், முஸ்தபாவின் நெல்லை நிகழ்ச்சி தாமதப்பட்டது. இவ்வளவுக்கும் ஒரு ‘ஸாரி' கூட அவள் போடவில்லை. ஒரு இன்சார்ஜ் டாக்டரிடம் நடந்து கொள்ளும் முறையா இது? அதேசமயம் டாக்டர் சந்திராவுக்கு முஸ்தபாவின் கடுகடுப்பு பெரிதாகத் தெரியவில்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனம் முழுதும் கலைவாணியும் மனோகருமே. மனோகர் பேசிய தோரணையைப் பார்த்தால், கலைவாணி கழுத்தில் தாலி கட்டி விடுவது நிச்சயம். ஆனாலும் இந்தக் கல்யாணத்தை தடுத்தாக வேண்டும். மூளை வைத்திருக்கும் இடத்தில், மூர்க்கத்தனத்தை வைத்திருக்கும் இந்த முஸ்தபாவிடம் பேசிப் பலன் இல்லை. வினையே இவர்தான். நேற்று மட்டும், இவர், தனக்குரிய ஒய்வு நாளான ‘ஆப் டேயில்' வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாவிட்டால், மனோகரிடம், விஷயத்தை ஆற அமரச் சொல்லி, அவரை சமாதானப்படுத்தி இருக்கலாம். ஆனால் இங்கே வர வேண்டிய அவசரத்தில், மனோகரிடம், கடுமையாய் பேச வேண்டியது ஏற்பட்டது. இந்த முஸ்தபா, தன்னுடைய வேலையை ஒழுங்காய்ப் பார்த்தால், நான் என் சமுகப் பணியை ஒழுங்காய் பார்த்திருக்க முடியும். பல சில்லறைத் தொல்லைகள் - சொன்னால் சிரிக்கக் கூடிய சின்னச் சின்ன ஒழுங்கீனங்கள், பிறத்தியார் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளாய் ஆகின்றன. அதுவும் விஷக் கிருமிகளாய் ஆகிவிடுகின்றன. இதனால்தான், ஒரு பூவைப் பறித்தாலும், அது நட்சத்திர மண்டலத்தில் எதிரொலிக்கும் என்கிறார்களோ - பல்வேறு பிரச்சினைகளின், தலைமறைவான வேர்கள் அறியப்படாது போவதால்தான், பிரச்சினைகளின் அறிகுறிகளை நீக்கப் பார்க்கிறோமே தவிர, அந்த நிசங்களை அல்ல.

டாக்டர். சந்திராவின் சிந்தனை சிறகடித்து பறந்து கொண்டிருந்தது...

டாக்டர் சந்திரா, முஸ்தபாவை உஷ்ணமாகப் பார்த்தாள். அவரோ எதிரே கைக்குழந்தைகளோடு நின்றவர்களை எரிச்சலாய்ப்பார்த்தார். முதலாவதாய் நின்ற பெண்ணிடம் காகிதத்தை வாங்கினார், அப்போதுதான் வந்த அட்டெண்டர் பையனிடம் ஆணையிட்டார்.

‘ஹெல்த் விசிட்டரை வரச்சொல்லப்பா!’ அந்த விசிட்டர் வருவது வரைக்கும், வேறு எந்த நோயாளியையும் பார்க்கப் போவதில்லை என்பதுபோல், டாக்டர் முஸ்தபா, காலி நாற்காலி பக்கம் திரும்பினார். சந்திரா, தன் பக்கத்து முக்காலியில் ஒரு பெரியவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/73&oldid=1405038" இலிருந்து மீள்விக்கப்பட்டது