பக்கம்:பாலைப்புறா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 77

சகுந்தலா பெயர்கள், இரண்டாவது பக்கத்தில், இரண்டு கோடுகளுக்கு இடையே பிரசுரிக்கப்பட்டு இருந்தன...

சந்திராவுக்கு, கண்ணிர் வந்தது. முக்காலியில் உட்காரப்போன ஒரு நோயாளிப் பெண் கூட, உட்காராமல் மருண்டு நின்றாள். அவள், அப்படி மருள்வது தெரியாமல், சந்திரா மருண்டு நின்றாள். கண் முன்னால், ஒரு அப்பாவிப் பெண் சிதையப் போகிறாள். சிதைத் தீயான அக்னியை வலம் வரப் போகிறாள். அவளை எந்தக்கரம் பற்றிக் கொள்ளப் போகிறதோ... அது ஒரு ஹெச்.ஐ.வி. கரம்... கரம்... கரத்தைப் பிடிக்கவில்லை. எய்ட்ஸ் கிருமிகள், ஒரு நல்ல கரத்தைக் கெளவுகின்றன. கெட்டிமேளத்தோடு...

டாக்டர் சந்திரா, தன் முன்னால் கோபமாய் வந்து நிற்கும் டாக்டர் முஸ்தபாவைப் பார்த்துப் பயந்து போனாள். சில்லரைச் சண்டைகள் வந்ததுண்டு. ஆனாலும் இப்படி பல்லைக் கடித்து, அவரைப் பார்த்ததில்லை.

‘ஒங்க கிட்டே தனியா பேசணும்... இப்பவே பேசணும்... அந்த பக்கம் வாங்க!’

இருவரும், பின் பக்கமாய் உள்ள அறைக்குள் போனார்கள். டாக்டர் முஸ்தபா, அறையை தாளிடாமலே கதவைச் சாத்தினார்... அந்த ஆவேசத்திலும், யாரும் தப்பாக நினைக்கப்படாது என்று நினைத்தவர்போல், ஜன்னல்களை திறந்து வைத்தார். சந்திராவின் முகத்துக்கு முன்னால் விரலாட விட்டு, எதிரி வக்கீல் போல் கேட்டார்.

"ஒங்க மனசுலே என்ன நெனைப்பு... மதர் தெரோஸான்னா... இல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டின்னா...?”

"என் நெனப்ப பற்றி யார் கவலைப்பட்டாங்க? உங்க நெனைப்பு என்ன டாக்டர்?”

"செய்யறதையும், செய்துட்டு குத்தல் பேச்சா? மனோகர் கிட்டயே அவருக்கு ஹெச்.ஐ.வி. இருக்குறதா... யாரைக் கேட்டு சொன்னிங்க?”

‘என் மனசாட்சிய!’

"மோகன்ராம்... ஒங்களை ராத்திரியோட ராத்திரியாய் தூக்கிட்டுப் போகப் போறாராம். அப்படித்தான் அவர் மனசாட்சி சொல்லுதாம்”

"போலீஸ் எதுக்கு இருக்குது...?”

அதுக்கும் மனசாட்சி இருக்குமுன்னு நீங்க நம்புறதே தப்பு. ஏன்னா அவங்க கைதிகளோட வந்து சர்டிபிகேட் கேட்கும்போது, நீங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/77&oldid=1405056" இலிருந்து மீள்விக்கப்பட்டது