பக்கம்:பாலைப்புறா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 பாலைப்புறா

சந்திராவின் முகம் படும்போது மட்டும், மனோகரின் முகத்திற்கு வலிப்பு வந்தது.

அதே சமயம், முன்னால் இடம் கிடைக்காமலும், பின்னால் போய் உட்கார மனமில்லாமலும் நின்ற நாட்டு வைத்தியர் பேச்சிமுத்துவைச் சுட்டிக்காட்டி, மனோகர், பலராமனிடம் சொல்ல, அவன் கீழே இறங்கி, அவரை கைக்குட்டை கிடந்த நாற்காலியில் உட்காரவைத்தான்; இந்தப் பிரிவினை கூட ஊழ்வினையாக நினைத்து, மேடையில் நின்ற மீரா துடிதுடித்துப் போனாள்.

கிட்டத்தட்ட அனைவருமே, மணமக்களை, அரைகுறை நிர்வாணமாக்கி ஜோடி சேர்த்தபோது, கடைக்கோடி வரிசையில் ஒரு தத்துவ விசாரம்... வி.ஐ.பி.யாகக் கருதி கொண்டு முன் வரிசைக்குப் போன வெளியூர் சொந்தம் ஒன்றை, பின்னுக்கு அனுப்பி விட்டார்கள். இதனால் ஐபி கொடுத்தவர் போலான அந்த வெளியூர் வி.ஐ.பி. பக்கத்து இருக்கைக்காரரிடம், தனக்கு நேர்ந்ததை, அவருக்கு வந்ததுபோல் சொன்னார்.

"ஒருத்தருக்கு... இன்னொருத்தர் எவ்வளவு மரியாதை வச்சிருக்காங்க என்கிறது, இந்த மாதிரி பொது இடத்துலதான் துலங்குமுன்னு ஒமக்குத் தெரியுமா...? நம்ம வீட்டுக்கு, கல்யாண நோட்டீஸ் கொண்டு வரும்போது நாம கலந்துக்காட்டால், கல்யாணமே நடக்காது என்பது மாதிரி பேசுவாங்க. ஆனால், வந்த பிறகுதான் தெரியும்; ஒம்மப் பார்த்துட்டு தலையக் கூட ஒப்புக்கு ஆட்டமாட்டாங்க. இதனால்தான் தராசும் படியும் ஊர்லன்னான்... இதுதான் உலக நடப்பு... புரியுதாவே!”

“எப்படி புரியாம இருக்கும்? ஒம்மைப் பார்த்துட்டு, உடனடியாய் கையப்பிடிச்சு கூட்டிட்டுப் போன கலைவாணியின் அண்ணன்- கமலநாதன், இன்ஸ்பெக்டரை ... பார்த்ததும் ஒம்ம அப்படியே விட்டுட்டு, போலீஸ் அதிகாரியைப் பார்த்து ஓட மட்டுமா செய்தாரு.. முன் நாற்காலியில் உட்கார்ந்த ஒம்மை எழுந்திருக்கச் சொல்லி, இன்ஸ்பெக்டரை உட்காரச் சொன்னாரே... நானும் பார்த்தேன்!”

‘இவ்வளவுக்கும் கமலநாதன்... என் அண்ணன் மருமகன்’

‘அண்ணன் ஏதடா... தம்பி ஏதடா.. அவசரமான உலகத்திலே... கண்ணதாசன் வாயில் சர்க்கரை போடணும். அப்போக்கூட, தவசிமுத்து உப்பு போதும்பார்.’

எல்லாமே, அவசர அவசரமாய் இயங்கிக் கொண்டிருந்தன. முக்கனிகளில் மூன்றாவது கனியான பலாவிற்குப் பதிலாக ஆப்பிளையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/82&oldid=1405067" இலிருந்து மீள்விக்கப்பட்டது