பக்கம்:பாலைப்புறா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 பாலைப்புறா

வெறுங்கையோடு நின்றாள்... (அந்த சுற்றுப்புறக் கிரா மங்களில் மணப் பெண்கள் பால் பழத்தோடு, முதலிரவு அறைக்குள் நுழைவதில்லை). மனோகர், அவளை மலங்க மலங்க பார்த்தபோது, அவள் கீழே குனிந்து, அவனை சாய்வு நாற்காலியில் இருந்து தூக்கப் போனாள். முடியாது போகவே, அவன் மீது நாணிக் கோணிய கொடியாய்ப் படர்ந்தாள்... படர்ந்து படர்ந்து, செல்லமாகச் சிணுங்கினாள்...

‘இப்படியா... தாலிய திணிக்கறது? கழுத்திலே ஒரே எரிச்சல்’...

மனோகர், அவள் கழுத்தை வருடிவிட்டான். ரத்தக் கோடுகளை, கை உணர்ந்தது. ஆனாலும், அவள், அந்த வலியை அடக்கிக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்ப்பதும், பிறகு கண்களை கைகளால் மூடிக் கொள்வதுமாக இருந்தாள். அவனோ, பேச வேண்டும் என்பதற்காகப் பேசினான்.

"ஆயிரம் பேர் இருக்கிற கூட்டத்திலயும், அந்தப் போடு போடுவே... அப்படி அசத்துவே... இங்கே ஏன் இப்படி...?”

"அந்த ஆயிரம் பேரும், நீங்களும் சரியாயிடுமா? ஆனாலும், நான் பெரிதா நினைத்த அளவுக்கு நீங்க இல்ல...”

‘அய்யய்யோ...’

‘பின்ன என்ன? இந்த ராத்திரியிலே நம் கல்யாண நிகழ்ச்சியை வீடியோவுல போட்டுக் காட்டுறேன்னு ‘பிராமிஸ்' செய்தீங்க. ஆனால், வீடியோக்காரங்க வரவே இல்லை... முடியாதுன்னு தெரிஞ்சிருந்தால், எங்கப்பா ஏற்பாடு செய்திருப்பார்’

"அதை ஏன் கேட்கிற... வீடியோக்காரங்க, முன்னாலயே ஊருக்கு வந்துட்டாங்களாம்... எங்கப்பன், ‘எங்க சாஸ்திரப்படிகல்யாணத்தை படம் பிடிக்கப்படாது'ன்னு, அவங்களை துரத்திட்டாராம். வரதட்சிணை பணத்தில வீடியோவுக்கு அவரே பணம் கொடுக்கனுமுன்னு சொன்னேன்... அதனால வந்த வினை".

"ஒருத்திக்கு, பிறக்கிறது, கல்யாணம், முதலிரவு, முதல் குழந்தை பெறுவது, இறக்கிறது- இந்த ஐந்துதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள். பிறக்கிறதையும் இறக்கிறதையும் படம் எடுக்க முடியாது... முதலிரவையும், குழந்தை பெறுவதையும் வீடியோ எடுக்க முடியாது... மிஞ்சுறது கல்யாண நிகழ்ச்சிதான். அதையும் கோட்டை விட்டுட்டிங்களே”.

‘எல்லாம்... அந்த பாவியால வந்தது; கல்யாண வரவேற்பையும் ரத்து பண்ணிட்டான். ஊர் முழுக்க பட்டதாரிப்பையன்கிட்ட என் மூலம் வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/86&oldid=1405071" இலிருந்து மீள்விக்கப்பட்டது