பக்கம்:பாலைப்புறா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒன்றான கலைவாணியின் வீட்டில், அன்று ஒரே பெண்கள் கூட்டம். ஆனாலும், வெள்ளையன்பட்டி மகளிரைவிட வித்தியாசமான கூட்டம். தரையில் உட்காருவது தகுதிக்கு குறைந்த காரியம் என்பதால், சோபா செட்டில் இருந்த கூட்டம். அதில் இடம் கிடைக்காதவர்கள், தத்தத்தமது வீடுகளில் இருந்து நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். கண் வெட்டும் அளவுக்கு நகை நட்டு இல்லாதவர்கள்... ஆனால், ஒவ்வொருத்தியின் கையிலும் ஒரு கடிகாரம்... கண்களில் மை... உதடுகளில், லேசான சாயம்... முதுகை முழுமையாக, மூடிய மாமிகள்... தோள் திரட்சியைக் காட்டும் கட்சோளிகள்...

சமையலறையில், வேலைக்காரப் பெண் மீனாட்சியுடன், பம்பரமாய் இயங்கிய கலைவாணி, பெரிய எவர்சில்வர் தட்டில், தொட்டால் கடும் பக்கோடாக்களை கொண்டு வந்து, டிரேயில் வைத்தாள். அந்தப் பெண்கள் தின்று முடித்தால், டீ கொண்டு வரலாம் என்பதற்காக அவர்களின் தின்னும் வேகத்தையும், பக்கோடாக்கள் தீர்த்து கொண்டிருக்கும் வேகத்தையும், பெருக்கல் போட்டு, ஒரு குத்துமதிப்பான நேரத்தை அனுமானித்தவள் போல், மீனாட்சி தேநீர்தயாரிக்க ஆயத்தமானாள். பக்கோடா தீரும் நேரமும், தேநீர் ரெடியாகும் நேரமும் ஒன்றாக அமைவதற்குரிய வகையில், அவள் தனக்குத்தானே தேநீர் தயாரிப்பு வேலையின் வேகத்தை நிச்சயித்துக் கொண்டாள்.

சமையலறைக்குள், தண்ணீர் கொண்டு வரப் போன கலை வாணியை, திருமதி. பாலா நாராயணசாமி, கையைப் பிடித்திழுத்து, பக்கத்தில் உட்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/89&oldid=1405074" இலிருந்து மீள்விக்கப்பட்டது