பக்கம்:பாலைப்புறா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 பாலைப்புறா

வைத்தாள். பிறகு அவளைப் பாராட்டுவதற்காக வாயைத் திறந்தாள்.

‘மிஸஸ்... மனோகர்’.

"என்னைக் கலைவாணியின்னே... கூப்பிடுங்க ஆன்டி!”

‘நோ... நோ... இனிமேலும் நீ பட்டிக்காடு இல்லே, சொந்தப் பேரால் கூப்பிட... இப்போ நீ ஒரு ஹவுஸ் ஒய்ப். மிஸ்ஸஸ் மனோகர்ன்னு கூப்பிட்டால்தான் ஒனக்கே கெளரவம்’...

“எப்படிக் கூப்பிட்டாலும் பரவாயில்லை... சொல்லுங்க ஆன்டி...”

‘ஒன்னை நாங்க பாராட்டித்தான் ஆகணும்... இந்த அடுக்குமாடி கட்டிடம் எழும்புன காலத்திலேயே இருக்கிறவங்க நாங்க... ஆம்புடையான் தோளுல கையைப் போட்டு அவனோட ஸ்கூட்டர் பின்னால உட்கார்ந்து போற சமயம் தவிர, மற்ற சமயத்தில... ஒன்று அடுப்படில இருப்போம்... இல்லன்னா டிவி பெட்டி முன்னால இருப்போம். டிவி பெட்டியிலே வர்ற நிழல்கள் பேர் அத்துபடி... ஆனால் அக்கம் பக்கத்து ஆத்துக்காரிங்க ஆருன்னே தெரியாது. அப்பேர்ப்பட்ட எங்களை ஒண்ணா சேர்த்த பெருமை ஒனக்குத்தான்... முத்துக்களை கோர்க்கிற நூல் மாதிரி'.

திருமதி பாலா நாராயணசாமியின் உதாரணத்தை, அவளை அறவே வெறுக்கும் திருமதி சியாமளா நாகராஜன் ஆட்சேபித்து, ஒரு திருத்தம் கொண்டு வந்தாள். வெறும் திருத்தம் அல்ல... குறும்புத்தனமான, அப்பட்டமான சூழ்ச்சி மாதிரியான திருத்தமாய்தான், அது, திருமதி நாராயணசாமிக்குப் பட்டது.

“மிஸ்ஸஸ் மனோகர். நீங்க சொல்றது மாதிரி வெறும் மாஞ்சா நூல் இல்லே மேடம்... இந்த உதாரணம் அவங்களை இன்சல்ட் செய்யுறது மாதிரி. உண்மையான உதாரணம் என்னென்னால்... மிஸ்ஸஸ் மனோகர், பொன் காசுகளை மாலையாய் காட்டும் தங்கச்சரடு... இப்படிச் சொல்றதுதான் சரியான ரெகக்ணைசன்...!”

திருமதி நாராயணசாமிக்கும், திருமதி நாகராஜனுக்கும், அங்கேயே வாய்ச்சண்டை வந்திருக்கக் கூடும். அதற்குள், அந்த வீட்டின் வெளியே உள்ள தாழ்வாரம் வழியாய், பட்டும் படாமலும் பார்த்தபடியே நடந்த திருமதி மஞ்சுளா கண்ணனை, கலைவாணி வீட்டில் இருந்தபடியே, சிவப்பழகி திருமதி எட்வர்ட் சாமுவேல் கைத்தட்டிக் கூப்பிட்டாள்.

‘மாமி... இங்கே வாங்கோ. இன்னிக்கி இந்த பூஞ்சோலை குடியிருப்பு பெண்கள் சங்கத்தை இங்கே துவங்கப் போறதாய்... எத்தனை தடவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/90&oldid=1405075" இலிருந்து மீள்விக்கப்பட்டது