பக்கம்:பாலைப்புறா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 91

சொல்லி இருக்கேன் வரப்படாதா...’

திருமதி மஞ்சுளா கண்ணன், வரப்படாது என்பது மாதிரியே நடந்த போது, கலைவாணி ஓடிப்போய், அந்த மாமியை உரிமையோடு மடக்கி, உள்ளே கொண்டு வந்தாள். ஆனாலும் திருமதி கண்ணன், உட்காராமலேயே பேசினாள்.

‘என்னை விட்டுடு. கலைவாணி... எனக்கு இந்த சங்கமும் வாணாம் அசிங்கமும் வாணாம்’.

"மாமி. இப்படி சலிச்சிக்கிட்டா எப்படி?”

‘போன வருஷம், அடுத்த மாடில இருக்கிற என் வீட்டில, என்னோட ஒரே மகன் கெளதம். வீட்டுல இருந்து ஆஜானுபாகுவாய் போனவன்... கடலுள் நீந்தி பிணமா... வந்து சேர்ந்தான். அப்போ உதவிக்கு ஒருத்தி தலையை நீட்டல. இதைவிடக் கொடுமை, என்னன்னா எதிர் வீட்டுலே டிவி பெட்டி ஆடுது... பக்கத்து வீட்ல ரேடியோ பெட்டி பாடுது. இப்போ சொல்லு கலைவாணி... என் மனசு என்ன பாடுபட்டிருக்கும். அதனாலதான் சொல்றேன்... இந்தச்சங்கம் எனக்கு அனாவசியம்’

அங்கே உட்கார்ந்திருந்த பெண்கள் உம்மணா மூஞ்சியானபோது, கலைவாணி, திருமதி கண்ணனை, தான் இருந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு சொன்னாள்.

‘நீங்க சொல்றது நியாயமாத்தான் படுது. நீங்க சங்க உறுப்பினரா ஆகணுமுன்னு அவசியமில்ல. ஆனால், பக்கடா சாப்பிட்டுட்டே போகலாம். டீ குடிச்சிட்டு போகலாம்...’

‘கலைவாணி... ஒன்னோட முகத்துக்காக உக்காருறேன். ஆனால் சங்கத்தில மட்டும் சேரமாட்டேன்’.

திருமதி பாலாநாராயணசாமி விளக்கமளித்தாள்.

"இப்படில்லாம் இனிமேலும் இருக்கப்படாதுன்னுதான், இந்த சங்கத்தை துவக்கப் போறோம். இனிமேல் மட்டும் பாருங்கோ... யார் ஆத்துலயாவது இப்படி ஏடாகோடமாய் நடந்தால், நாம அத்தனை பேரும் அந்த வீட்டு முன்னால போய் நிற்போம்”

திருமதி நாராயணசாமி எப்படியும் அந்தச் சங்கதத்திற்கு தலைவியாய் ஆகிவிடக் கூடாது என்பது போல், அதே வயதான ஐம்பதும், அதே கலரான ஊமத்தம்பூ நிறமும் கொண்ட திருமதி சியாமளா நாகராஜன் கண்டிப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/91&oldid=1405084" இலிருந்து மீள்விக்கப்பட்டது