பக்கம்:பாலைப்புறா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 பாலைப்புறா

போல் கண்டிப்பாய்ப் பேசினாள். ‘மேடம்... ஒரு வீட்ல கெட்டது நடந்தாத்தான் போகணுமா? நல்லது நடந்தால் பொறாமை வந்திருமா...? ப்ளீஸ்... பீ... பாஸிட்டிவ்’

‘தெரியாமத்தான் கேட்கேன்... மிஸ்ஸஸ் நாகராஜன்! நீங்க... சங்கத்தைப் பற்றி டிஸ்கஸ் செய்ய வந்தீங்களா... இல்ல என்னோட வம்பு வழக்கடி செய்யறதுக்கு வந்தீங்களா...’

"பாஸிட்டிவ்வா... பேசுங்கன்னு சொல்றது வம்பா? மிஸ்ஸஸ் மனோகரை நாகரீகமான உதாரணத்தால பாராட்டுங்கோன்னு சொன்னது வழக்கடியா? வாட் இஸ் திஸ் ஆல் எபவுட்...”

அங்கே கூடியிருந்த முப்பது பெண்களில் இன்னும் உருவாகாத அந்த சங்கத்தின் தலைவியாய், ‘தொண்டாற்ற ஆசைப்பட்ட பத்துப் பேரில் எட்டு பேருக்கு கொண்டாட்டம். முதல் சுற்றில் நின்ற திருமதிகள் நாராயணசாமியும், நாகராஜனும் ஒருவரை ஒருவர் கேன்சல் செய்து கொண்டதில், உள்ளபடியே, மகிழ்ச்சி, இதற்குள் மீனாட்சி கொண்டு வந்த தேநீர் கோப்பைகளை எல்லோருக்கும் கொடுத்து முடித்த கலைவாணி, விருந்தோம்பல் செய்த உரிமையோடு பார்த்தாள். அந்தப் பார்வையில் வெள்ளையன் பட்டியில், அவளுக்குள் இருந்த தன் பேச்சைக் கேட்பார்கள் என்ற தன்னம்பிக்கைக்குப் பதிலாக, சரியாய் இருக்குமா என்று நினைக்கும் ஒரு மாணவத்தன்மையே அதிகமாய் இருந்தது...

‘இருநூறு பெண்கள் இருக்கிற இந்தக் குடியிருப்புல வந்திருந்ததே முப்பது பேரு’.

‘என்னை கணக்குலே சேர்க்காதே... நான் ஒன் முகத்துக்காக ஒன்னைப் பார்க்கத்தான் வந்தேன். எப்போ என் பிள்ளையாண்டான்... பிணமா வந்தானோ’

"சரி... இருபத்தொன்பது பேரு. இந்த சின்னக் கூட்டத்திலேயே நாம் இப்படி சமாத்காரமாய் பேசினால், அப்புறம், பின்னால் சேரணுமுன்னு நினைக்கறவங்களும் சேரமாட்டாங்க.”

உறுப்பினராகப் போவதில்லை என்று உறுதி மொழி எடுத்திருக்கும் திருமதி கண்ணன் ஜோஸ்யம் சொன்னாள்.

"இந்த இருபத்தொன்பதுகூட... நீ வீடு வீடாய்... போய் கதவு கதவாய், காலிங் பெல்லை அழுத்தி, கெஞ்சிக் கூத்தாடுனதால.. வந்திருக்காங்க. வேணுமுன்னாப்பாரு... அடுத்த கூட்டத்தில, லட்டர் பேட்ல பெயர் இருக்கறவங்க மட்டுந்தான் வருவாங்க..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/92&oldid=1405085" இலிருந்து மீள்விக்கப்பட்டது