பக்கம்:பாலைப்புறா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 95

மாதம் பதினாலாயிரம் ரூபாய்

‘கன்கிராஜுலேஷன்ஸ்’.

"சும்மாக்கிட... போகமாட்டேன்னு சொல்றானே... பாவிப்பயல் அமெரிக்காவிலே எம்.எஸ். பண்ணப் போறேன்னு குதிக்கானே!”

‘இந்தக் காலத்து பிள்ளிங்களே அப்படித்தான் மாமி... என் மகன் வில்லன்... அவன் என்ன காரியம் செய்திருக்கான் பாருங்க... முதல் மாத சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு வந்து என்கிட்ட கொடுப்பான்... நான் கன்னிமேரி முன்னால வைக்கணுமுன்னு நினைத்தால், ஏ.ஸி மிசினை வாங்கிட்டு வாரான். கேட்டால் இரண்டு மாதச் சம்பளந்தானேன்னு சொல்லிட்டு சிரிக்கான்’

மாதம், நாலாயிரம் ரூபாய்க்கு உட்பட்ட சம்பளம் வாங்கும் கணவன்மாரைக் கை பிடித்தவர்கள், அங்கேயே முணுமுணுத்தார்கள். வீட்டுப் பெருமைகளை மானசீகமாய் கொண்டு வந்து அங்கதம் பேசிய ‘பெரிசுகளை' முறைத்தார்கள். இன்னும் சிலதுகள், தத்தம் கணவன்மார் அல்லது பிள்ளைமார் ‘அடாவடி' செலவுகளைப் பேசப் போனார்கள். அதற்குள் நகரத்துக் கலைவாணி, கிராமத்துக்காரியாகி கூட்டத்தை ஒரு அதட்டலோடு பார்த்து, சங்கத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கப் போனாள்.

‘இப்போதெல்லாம், சென்னையில் நமக்கு... குறிப்பாய், எங்களை மாதிரி இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கு... அடுக்கு மாடிக்காரிகளை கிண்டலடித்தால், அவளுக கணவர்கள் கண்டுக்கமாட்டாங்க என்கிற மாதிரி ஒரு எண்ணம் வந்திருக்கு. இதனால நம் கேர்ள்ஸ்கு கராத்தே கற்றுக் கொடுக்கணும். அடுத்த தெருவிலயே ஒரு கராத்தே மாஸ்டர் இருக்கார். இது... நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... இரண்டாவதாக...’

கலைவாணியின் பேச்சிற்குத் தடங்கலாய் ஒரு மின்சாரச் சத்தம். கிளி, பூனையிடம் அகப்பட்டால், எப்படிக் கத்துமோ, அப்படிப்பட்ட காலிங்பெல் ஒசை. வேலைக்காரப் பெண் மீனாட்சி, சமையல் அறையில் இருந்து தாவிப் போய்க் கதவைத் திறந்தாள். மனோகர், டையும் கோட்டுமாய் நின்றான்.

கலைவாணி, கணவனை முகம் சுழித்துப் பார்த்தாள் கூட்டம் நடக்கப் போறதாய் காலையிலேயே சொன்னனே என்பது மாதிரி; இதற்குள் சியாமளா “இதுக்குத்தான் புதுசா கல்யாணம் ஆணவங்க வீட்டுக்கு பகலுலயும், வரப்படாதுன்னு நான் சொன்னது" என்றபோது, வாசலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/95&oldid=1405088" இலிருந்து மீள்விக்கப்பட்டது