பக்கம்:பாலைப்புறா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 97

ஒரு வருடத்திற்கு முன்பு, தன் கழுத்தில் மஞ்சள் சரடை போட்டுவிட்டுப் போன ஒரு அமெரிக்கத் தமிழன், இன்னும்தன்னைபிறந்த வீட்டுலயே விட்டுவைத்திருப்பதை நினைத்துப் பேசிய நிர்மலாவை, எல்லோருமே அனுதாபமாகத் தான் பார்த்தார்கள். அதற்குள் திருமதி பாலா நாராயணசாமி, ஒரு யோசனை சொன்னாள்.

“எங்க வீட்டுக்காரர்கிட்டே சொல்லி... இங்கே இருக்கிற பூஞ்சோலை குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், மிஸ்டர்... மனோகருக்கு ஒரு பாராட்டு... கம் வழியனுப்பு விழா வைக்க ஏற்பாடு செய்யுறேன்...”

திருமதி விஸ்வநாதன், பாலா மாமியை எரித்துப் பார்த்தாள். இவளே செயற்குழுவா? விடப்படாது

"நோ... நோ... நம் பெண்கள் சங்கம் மூலமாகவே பாராட்டு விழா நடத்திடலாம்!”

எல்லாப் பெண்களும், திருமதி விஸ்வநாதனின் யோசனைக்கு, சந்தா கொடுக்கற எண்ணம் இல்லாமலே கைதட்டினார்கள். கம்ப்யூட்டர் படிக்கும் தன் பேரனை, மனோகரின் அமெரிக்கத் தலையில் திணிப்பதற்கு திட்டம் போட்ட பாலாமாமிக்கு சிறிது வருத்தந்தான். ஆனாலும், சமாளித்தாள்.

“சரி... அவாள கொஞ்ச நேரம் தனியா விடுவோம்... நாளைக்கு என் வீட்ல கூடி பாராட்டு விழாவ பைசல் செய்வோம்”.

திருமதி நாகராஜன், பாலா மாமி தேர்ந்தெடுத்த இடத்தை ஆட்சேபிப்பதற்கு முன்பே, எல்லாரும் எழுந்து ஒருவருக்கொருவர் பேசியபடியே வெளியேறினார்கள். வேலை முடிந்து, கைகளை பாவாடையில் துடைத்துக் கொண்ட மீனாட்சியை, கண்ணடித்து கூட்டிப் போனார்கள்...

தனித்து விடப்பட்ட மனோகரும், கலைவாணியும், எவர் 'முந்தி’ என்று கண்டுபிடிக்க முடியாத வேகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள். ‘ஒங்கள விட்டுட்டு எப்படித்தான் இருக்கப் போறேனோ' என்று புலம்பியவளின் அடி வயிறைத் தொட்டபடியே மனோகர், ஆற்றுப்படுத்தினான்.

"நம்ம குழந்தை அமெரிக்காவுலதான் பிறக்கப் போகுது!”

‘எப்படியாம்...?’

‘கம்பெனி சார்பில் வேலை பார்த்துட்டே எதாவது ஒரு அமெரிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/97&oldid=1405091" இலிருந்து மீள்விக்கப்பட்டது