பக்கம்:பாலைப்புறா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99 மனோகர், கிட்டத்தட்ட ஒரு வட்டச் செயலாளர் மாதிரி அந்தக் குடியிருப்பில் ஆக்கப்பட்டுவிட்டான்.

அந்தப் பூஞ்சோலை அடுக்குமாடிக் குடியிருப்புகளின், தோரண வாயிலின் முன் பக்கம், ஒரு கண்டசா கார்... கம்பெனி அனுப்பி வைத்திருந்தது. வெள்ளைவெளேர் என்று தங்க நிற விளிம்போடு, அமெரிக்க பாணியில் அசல் சண்டித்தனமாய் நின்றது... உள்ளே யூனிபாரம் போட்ட டிரைவர். முன்னாலும், பின்னாலும் சில கார்கள்.

மனோகர், அந்த குடியிருப்பு வாசிகளில் முக்கால்வாசிப் பேர் புடைசூழ, கழுத்தில் ஒரு ரோஜாப்பூ மாலையோடும், கையில் ஒரு மலர்ச் சென்டோடும், கலைவாணிக்கு இணையாய் நடந்தான். குடியிருப்போர் சங்கம், ஒரு சாமியானா பந்தலுக்குக் கீழே, அவனுக்கு வழியனுப்பு விழா நடத்திவிட்டு, அங்கிருந்தே அவனை நடத்திக் கொண்டு வந்தது. குடியிருப்பு பெண்கள் சங்கம், ஏற்கெனவே ஒரு பாராட்டு விழாவை, “கட் அவுட்’ வைக்காத குறையாக, தடபுடலாய் நடத்திவிட்டது. இந்தப் பெருமையில் திருமதிகள் பாலா நாராயணசாமி, நாகராஜன் உள்ளிட்ட அனைத்து திருமதிகளும், முண்டியடித்து எதிரே நகர்ந்து கொண்டே போன வீடியோக்காரர்களை விரட்டியடித்துப் பிடிக்கப் போவது போல அங்குமிங்குமாய் முன்னேறினார்கள்.

காரின் டிக்கியில் ஏற்றப்படும் சூட்கேஸ்களை, கையில் பிரம்புக் கூடையை பிடித்தபடியே, கலைவாணி மேற்பார்வை செய்தபோது, மனோகர், எல்லோருக்கும் தனித்தனியாய் கை கொடுத்து, அலுத்துப் போய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/99&oldid=1405096" இலிருந்து மீள்விக்கப்பட்டது