பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கணிச்சாறு முதல் தொகுதி தகைநலம் இன்றித் தாயெனும் உரிமையால் மிகைநலங் கூறலை மேன்மையர் செய்யார்! அத்தகு அடிப்படை ஆர்வ முதிர்ச்சியால் முத்தமிழ் மொழியின் முதுநலம். முழக்கியும் எந்தமிழ் நாட்டில் இந்தி நுழைவதை வெந்த உளத்தொடும் உரையொடும் விலக்கிட எண்ணரும் வகையால் எடுத்து விளக்கியும் பண்ணலங் கூட்டிப் பாட்டிலும் எழுத்திலும் 230 எழுதிக் காட்டினேன்! எந்தமிழ்த் தோழரீர் பழுதென அவ்வுரை அவர்க்குப் பட்டதால் உள்ளமும் உடலும் ஊறுற் றனவெனக் கள்ளமில் என்னைக் கடுஞ்சிறை தள்ளினர்! என்னைக் கடுஞ்சிறை இட்டதால் என்னுளம் முன்னினும் மூளுமோ? முங்கி யொழியுமோ? சீர்த்துப் பாய்ந்திடும் சிறுத்தையின் கூருகிர் ஆர்த்த நெடும்புல் அசைவில் வழுக்குமோ? மதர்த்தெழு களிற்றின் மலையுடல் தூண்கால் பதர்க்குவை கண்டு பதுங்கி யொடுங்குமோ? 240 பொங்கு பேரலைப் போக்கினை வீழ்சிறு தெங்கின் குரும்பை தேக்கி நிறுத்துமோ? தீக்குழம் புருக்கித் தெறிக்கும் எரிமலைப் பாக்குழம் பினையொரு பழம்பாய் தடுக்குமோ? எழுந்த வல்லரி ஏற்றின் உறுமலைப் பழம்பறை கொட்டொலி பரக்கச் சிதர்க்குமோ? உணர்வில் உயிரில் உடலின் நரம்பினில் புணர்ந்த செந்தமிழ் பூண்ட கூத்தின்ை அரசக் கோலெடுத் தாடும் குரங்கதன் உரசக் கால்நடம் ஊன்றி நிறுத்துமோ? 250 என்றுரை முழக்கி எழுந்து செந்தமிழ் வென்றர சாளும் நாளும் விரைந்ததே!