பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 20 33 தமிழில் கற்க முன்வருக! பழக்குலை கோதும் கிளிக்குழாம் அன்ன பசுந்தமிழ்த்தீம் பழக்குலை உண்டிட முன்வரல் வேண்டும் தமிழ் இளையோர் ! சழக்குளங் கொண்டவர் நானும் படிக்குடன் நண்ணியொன்றாய் முழக்குக அன்னார் செவிப்பறை யில்'தமிழ் வேண்டு மென்றே! - 1963 தமிழ் உழவு செய்க! எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞர் உங்கள் இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநூம் ஆற்றல்! துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை; உணர்வுமழை பொழிவிக்க எண்ணஎரு ஊழ்க்க! செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க! பின்னர் செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே! - - 1963