பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 31 52 தமிழ் ஆர்ப்பரிப்பா? வெட்கம்! தமிழரசின் அவைத்தலைவர் செய்தித்தாள் நடத்துகின்றார்; 'தினத்தந்தி' "ராணி என்றே! உமிழ்கின்ற கொச்சை நடை: உடை களையும் புகைப் படங்கள்; ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி! தமிழ் நாட்டின் இளைஞர்கை மிளிர் தலெல்லாம் பேசும் படம்' 'குமுதங்கள் இழிந்த நூல்கள்! அமிழ்கின்ற பண்பாட்டில் தமிழ் என்ற ஆர்ப்பரிப்பா? போர்ப்பாட்டா? அந்தோ! வெட்கம்! - 1967 தமிழ் படித்தால் வாழ்வு புதுமைபெறும்! அறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஒளி பெருகும்! திறம் பெருகும்; உரம் பெருகும்; தீமைக் கெதிர் நிற்கும் - மறம் பெருகும்; ஆண்மை வரும்! மருள் விலகிப் போகும்! புறம் பெயரும் பொய்மை யெலாம்! புதுமை பெறும் வாழ்வே! - 1967