பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

61

ஏயும் பொருள்கணக் கிட்டெழு நூறு முறைநினைப்பார்; ஆயும் பொருளும் முடிவுந் தெரிகிலார்; ஆய்ந்தவர்க்கொன் lயும் நிலைவரின் காசும் ஈகிலார்; ஈந்தவற்றை மாயும். பொழுதினும் தாம்நினை ஆட்டி மகிழுவரே!

பற்றொன் றிலர்போல் பலபடப் பேசுவர்; பாழ்ம்பொருட்கே எற்றென் ரிராப்பகல் எண்ணிப் புலம்புவர்; ஏதிலர்பால் . கற்றொன் றறிந்தவர் போலுரை யாற்றிக் களிப்புறுவர்! நெற்றொன் றிடைமறைந் துண்மை கரக்குமோ நெற்பதரே!

'கட்டுடை பாரோம்; களிபொருள் தேரோம் எனவுரைப்பர்; வட்டுடை யோர்முழம் சாலுமென் பார்தனி வாய்த்திடிலோ பட்டுடை யென்னினும் கட்டிக் களிப்பார்; படுத்துயர்க்கே நெட்டுயிர்ப் போடுவர், ஈகமென் றஃதை நிகழ்த்துவரே!

படைத்திடு சொல்வினை யாவினும் முந்திப் பணிதொடங்கின் இடைத்துணி போல இடையிடை யேநெகிழ் வாா;உரையால மிடைத்தருள்சாற்றி அணைக்கினும் மேன்மேல் மிடிதருவார்; கடைத்தவர் செய்கை; இணையரால் என்றுங் கழியிடும்பே'