பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

தெருத்தொறும் எங்கும் திரைப்பட விளம்பரம்! பருத்துள மார்பகம்! பாதிமே லாடை! இடைத்துணி நழுவிட இளிக்கும் பெண்களின் 180 தொடைதெரி வதுபோல் பெருஞ்சுவ ரொட்டிகள்!

துவண்டபெண் ஒருத்தியைத் தோள்மேல் துக்கல்போல் கவண்போல் இரண்டு கால்களை விரித்து நீட்டிப் படுத்துள நிலையினில் ஒருத்தி - ஏட்டில் இயம்பொணா இழிந்த காட்சிகள்!

திரைப்படச் செய்திகள் வெளியிடும் இதழ்களோ சிரைத்த மயிர்த்திரள் சேற்றில் மலக்குழை ! அட்டைப் படமுதல் அடுக்கடுக் காக ஒட்டடைப் படைபோல் ஒவ்வொரு பக்கமும் திரைப்பட நடிகையின் அரையுடைத் தோற்றம்! 170 உரைகளே - அவர்தம் உணவுகள், உடைகள், புனைவுகள், திருமணப் புனைந்துரை, வாழ்க்கை, கனவு நினைவுகள், கருக்கொண்ட செய்திகள் இன்னும் பலப்பல இழிவுபற் றியன! இன்ன செய்தியால் விளைகின்ற தென்ன? மக்கள் பெறுகின்ற மனஇழிவு எத்தனை? தக்கவோர் மன்பதை உருவா கிடுமா?

இன்ன கழிசடை இதழ்களை நடத்துவோர் அன்ன செய்தியால் பயன்பெறல் அல்லால் - விளம்பரப் பயனால் நடிக நடிகையர் - வளம்படல் அல்லால், வருகின்ற பயன்ஒர் எள்மூக் கத்துணை - எறும்புமுக் கத்துணை மக்களுக் காகிலும் நாட்டுக் காகிலும் தொக்கக் கிடைக்குமா? துயரன்றோ மிச்சம்! திரைப்படத் துறையே கறைப்பணத் தொட்டி! வரைபடத் திருத்துதல் கடினம் என்பதால் குறைகளை மலையாய்க் குவிய விடுவதா? கறைகளைக் கலையெனப் போற்றிக் காப்பதா?