பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

89

நடிப்புகள் சோடையா? பிடிப்பினில் குறையா? உடுப்புகள் எத்தனை ஒழுங்கொடு திகழ்ந்தன?

தியாக ராசப் பாடகர் முன்னம், வயங்கு கண்ணாம்பா, சின்னப்பா எதிரில், நகைச்சுவை யரசர் கிருட்டிணன் பக்கம், பகை கொளும் நடிப்பில் பாலையா தம்முடன் இற்றைத் திரைப்பட நடிகரில் ஒருவர் நிற்றல் இயலுமா? நிலைக்குமா இவர் புகழ்: - 260 ஆடிய அன்றையத் திரைப்படக் கதைகள் ஒடிய மாதங்கள், ஆண்டுகள் எத்தனை? இந்நாள் படங்களோர் மாதம் இருக்குமா? அந்நாள் மக்களுக் கறிவு குறைச்சலா?

உண்மை என்ன ! உணர்கின் lர்களா? நன்மை தருவதே மக்கள் நாடுவர் ! பொழுதைப் போக்கவோ திரைப்படம் வந்தது? பொழுதைப் போக்கவே என்று கொண் டாலும் பழுதுற நடந்தா பொழுதைக் கொல்வது? - ஒழுக்கம் குலைவுற நடப்பதா ஒய்வு? 270 மனத்தைச் சிதைப்பதா மனம்பெறும் மகிழ்ச்சி? தன்னை அழிப்பதா தான்பெறும் வாழ்க்கை?

திரைப்படக் காரர் ஒருநூறு பேர்கள் மறைப்புற நடத்தும் ஒழுக்கக் கேடே கலைகள், இசைகள், காட்சிகள் என்றால் நிலைகுலைந் திடட்டும் நெடியஇவ் வுலகம்! மலைகளும் கடலும் குமுறி எழட்டும்!

விலைமதிப் பற்ற உயிர்க்குலம் விழட்டும்! ஒருசிறு கூட்டம் உலகைச் சிதைப்பதா? பெருகிய மக்கள் பேச்சற் றிருப்பதா? 280 குடியரும் களியரும் கூத்தரும் காமரும் தடியரும் கயவரும் தரங்கெட வாழ்வரும் அமைத்துக் காட்டிடும் அமைப்பே கலையெனில் எமைப் பாட் டுணர்வின்ால் எழுப்பிச் சிதர்த்திடும்