பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

முங்குபே ராற்றலின் முனைப்புக் கென்பெயர்: தங்குபே ருலகின் ஒழுங்கிற் கென்பெயர்?

அழுக்கிலா ஒன்று தூய்மையா வதுபோல் ஒழுக்கம் என்பதன் உருவமே கலைகள்! சிதறிய துரசுகள் தூய்மையா காப்போல் 290 சிதறிய ஒழுக்கமும் கலைகள் ஆகா! ஒருதுறை நேரிய உணர்வுக் குவியலே ஒருதுறைச் சிறப்பினை வளர்க்க உதவும்! விலைமகள் நடத்தை கலைகளும் ஆகா! குலைவுறும் மனத்தை வளப்பமும் செய்யா? உள்ளத்தைக் கல்'வது கலையென உரைக்க! உளத்தைக் கொல்வது கொலையா? கலையா?

திரைப்படக் கருவியால் எத்தனை செய்யலாம்? உரைப்பதைக் காட்டிலும் உணர்வதைக் காட்டிலும் காட்சியால் ஒருவனின் கண்களைத் திற்ந்து - மீட்சி கொண்டிடத் திரைப்படம் மேலதே! 300 எத்தனை நாடுகள் எத்தனை மக்கள்! எத்தனைக் காட்சிகள்! எத்தனை மாட்சிகள்! அத்தனை யும்போய்ப் படத்தினில் கொணர்ந்து எத்தனை மக்களின் விழிகளைத் திறக்கலாம்:

நம்நாடு என்ன? பல்கலைக் கழகமா?

செம்புது வெள்ளமாய்க் கல்விபாய் கின்றதா? எத்தனைக் காலமாய் இழிந்ததிந் நாடு: பித்தெனும் சாதிப் பேய்களி னாலும்

சமயச் சாய்க்கடைக் குப்பைக ளாலும்,

அமைந்த இழிவினை அகற்றவே இன்னும் 310 நூறுநூ றாண்டுகள் செல்லினும் செல்லுமே! வேறு தீமைகள் விளம்பலும் வேண்டுமோ? பார்ப்பன நஞ்சு பரப்பிய கொடுமையின் ஆர்ப்பரிப் பின்னும் அடங்க வில்லையே:

தாளிகைத் துறையில் தான்தோன் றிகள்.சில

ஹரி பரப்பித் தொலைத்தன. தமிழை!