பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

91

'கூவ நீரினைக் குவளை குவளையாய்த் துTவலில் ஊற்றி எழுதத் தொடங்கின! - இந்தத் தீமையைத் தொலைப்பதும் என்றோ? கந்தல், உள்ளக் கழிசடை வாழ்க்கை - - - 320 அங்கிங் கென்று நாட்டைஆட் கொண்டது! இங்கிங் கெல்லாம் நினைவுகள் எழுவதால் திரைப்படத் துறையைத் தீண்டுவ தில்லென வரைப்பட நின்றோம்! வருந்தி இருந்தோம்! நின்றவன் எழுமுன் எழுந்தவன் நடந்தான் என்ற கதையாய் இழிந்தது திரைப்படம்!

ஆகவே, ஒ!ஒ! திரைப்படக் காரரே!

வாகாய்த் திருந்தி வருங் காலத்தில்

நல்ல கதைகளில் நாட்டஞ் செலுத்துக! நல்ல பாடல்கள் நாட்டுக்குத் தருக! 330 நடிகர் நல்ல் நடிப்பின்ை நாட்டுக! - நடிகையர் பெண்மையை நங்கையர்க் குணர்த்துக! படப்பிடிப் பாளர் பண்பைக் காட்டுக! - - - - - - படத்தின் இயக்குநர் பாடறிந் தொழுகுக! நாட்டைத் திருத்திடும் நல்ல தொண்டினில் நாட்டங் கொள்க நானிலம் சிறக்கவே!

- 1968