பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓ! தமிழ் மாந்தனே!

அன்று தொடங்கி இன்றைய நாள்வரை அடிமைத் தமிழனே! நீ துயில் எழுந்திட நின்று கதறிய தொண்டைகள் எத்தனை? நினைத்துப் புழுங்கிய நெஞ்சமும் எத்தனை? ஒன்றும் பயனிலை; ஒருசிறு மாற்றமும், * . உணர்விலும் அறிவிலும் உருப்பெற வில்லைகாண்! என்று விடியுமோ, இணையிலா விடுதலை ஏதுங் கெட்டயில் விருள்நிறை நாட்டிலே?

நேற்றுப் பிறந்தவர் நிலைநின் றெழுந்து,இந் நீணிலம் முழுவதும் நிறுத்தினர் ஆட்சியே! ஆற்றுப் படுகையில் அமர்ந்திருந் தார்பலர் அக்கரை ஏறினர்; அவர்நடை தொடங்கையில் வேற்றுப் புலத்திடை வெற்றிகள் குவித்த, நீவிண்ணிலும் மண்ணிலும் விழாப்பல வெடுத்த, நீ சோற்றுப் பருக்கையிற் சுவைநலங் காண்பதோ ? சூம்பிய மறத்தனம் சூடுறல் என்றையோ?

ஒட்டைக் குடில்களும் உயர்ந்தன மாடமாய் ! உன்னை இரந்தவர் உரிமையைப் பறித்தனர்! கோட்டை விடுத்தனை, கொள்கையைத் துறந்தனை ! குரலொலி குறைந்தது; குலைந்ததுன் குடிநலம்! நாட்டை, மொழியினை, மக்களை நலஞ்செயும் நாட்டமும் கொள்கிலை; நடுத்தெரு நின்றனை!

சட்டும். விடுதலை எண்ணமும் இன்றி, நீ

இருந்தனை யேல்,உனை இழப்பதும் உறுதியே!

பட்டம், பதவிகள் பாடழித் தன,உனை! பார்ப்பனப் பதடிகள் பழிசெயுந் துணிவுடன் கொட்டம் அடித்தன, துறைதொறும் துறைதொறும்! கூற்றை விளிப்பதோ அவர்துணை கூடியே? . மட்டந் தட்டுவர்; ஒ:தமிழ் மாந்த்னே! மற்றுநின் நிலையிலோர் மாற்றமும் காண்கிலேன்! திட்டங் கொள்ளடா, விடுதலைத் தீர்ப்புநாள் தெரிந்தது பார்;அதன் திகழ்ஒளி மூழ்கவே!

- 1970