பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

12?

இனித்தமிழ் நாடே இந்தியத் தினின்று தனித்துப் போவது தக்கதாம் என்றால், அரசியல் அடிப்படை என்னென ஆய்ந்தே #3 & உரசிக் கேட்பாய்; உண்மை உணர்கிலை. பொருளியல் அடிப்படை புகலுக என்கிறாய்! மருளுமுன் மனத்தினை என்னென மதிப்பேன்?

தமிழகம் பிரியா திருப்பது தவறெனற் கமிழாக் கரணியம் பத்தென அறைக!

ஒன்றே, தமிழ்மொழி உயர்நிலை கெடுமே ! இரண்டே, இந்தி என்றையும் புகுமே ! மூன்றே, சமயமும் குலமும் மூட்டிய ஆன்ற புரட்டினை அகற்றலும் அரிதே !

நான்கே, பார்ப்பனன் நச்சுத் தன்மையால் 贾夺联 தீங்குறும் இனத்தினைத் தேற்றலும் அரிதே ! ஐந்தே, தமிழ்ப்பண் பாடகன் றொழிமே !

ஆறே, தமிழ்மொழி இலக்கிய இலக்கணம் வேறு வேறாய் விலகி யழியுமே!

ஏழே, சமசுக் கிருதம் எழுந்து - பாழெனத் தமிழரை அடிமைப் படுத்துமே ! எட்டே, தமிழினம் இனியும் சிதறிக் கெட்டுப் படிப்படிக் கீழ்மையுற் றழிமே! ஒன்பதே, பொதுநிலை யுடைமை நிரம்பிய மன்பதை இங்கு மலர்த்துதல் அரிதே 150 பத்தே, அரசியல் அதிகார நிறைவே எத்தானும் எய்தல் இயல்வதாகாதே.

இத்தகு வியலாமை என்றும் இருந்திட ஒத்ததுன் உளமெனில் ஒற்றுமை பேசலாம்! இத்தளை நீக்கி எதிர்கா லத்துப் புத்துணர் வெய்திடும் புதுக்குமு காயம்,