பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

133

எந்தக் கட்சியில் நீ, இருந்தாலும்...!

எந்தக் கட்சியில் நீ இருந்தாலும் இனத்தை மறந்திடாதே! - தமிழா! இனத்தை மறந்திடாதே! - உன் சொந்தக் குடும்பம் தனைப்பல கருத்தால் சுட்டுப் பொசுக்கி டாதே! - தமிழா, சுட்டுப் பொசுக்கி டாதே!

எந்தத் திசையில் நீ இருந்தாலும் ஏற்றந் துறந்திடாதே! - தமிழின் எழிலைத் துறந்திடாதே! - பழங் கந்தலை யுடுத்துக் கஞ்சியை யருந்தினும் கணிவை யிழந்தி டாதே! - இனக் கருத்தை யழித்தி டாதே!

எந்த நிலத்தினில் நீ இருந்தாலும்

இயல்பை மாற்றிடாதே! - இனத்தின்

இணைப்பை யறுத்திடாதே! - உன் முந்தையர் வாழ்ந்த முதுதமிழ் நாட்டின் மொழியை மறந்திடாதே - உணர்வை மூளி யாக்கிடாதே!

எந்தப் படையினில் நீ இருந்தாலும் இனத்தை எதிர்த்திடாதே! - தமிழா, எதிரிக் குழைத்திடாதே! - உன் சொந்தத் தமையனைத் தம்பியைக் கொல்லவே சூழ்ச்சி நினைந்திடாதே! - பகைவன் சோற்றில் நனைந்திடாதே!

- 1973