பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

135

கொண்ட வடவரின்பால் கண்ட பயன் அடிமை-யல்லால்,

உரைப்பது வோ-சொல்லால் ? மென்றோம் பல்லால் -இனி பண்டைப் பெருமைநிலை உண்டே உரிமைபெற-வாரீர் !

ஒன்று-சோர் W - wo -விடுதலையைச். (சொன்னால்)

- 1973

தமிழிளைஞர் .. வீறுகொள்க!

இற்றைநாள் தமிழிளைஞர் எழில்புனைந்து குறுந் துணியை இறுக்க மாட்டிக் கற்றைமுடி பின்தொங்கப் பாவையர்போல் கடைசுற்றக் காணும் போது ~ மற்றைநலம் நினைக்கின்ற நினைவெழுமோ? மறவுணர்வு மதர்ந்து தோன்ற - அற்றைநாள் நலன்மீட்கும் ஆர்வமெல்லாம் அலைந்தெழுமோ? அழிந்தி டாதோ?

பழியாகும் பாழ்வழியை நம்மிளைஞர் உடன்விடுத்துப் பதைப் தைத்து, r மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் பொருளாலும் பண்பாட் டாலும் விழியாமற் கிடக்கின்ற தமிழினத்தை விடுவிக்க வீறு கொண்டால், . . " பொழியாதோ பொதுமைமழை, பூக்காதோ புதுமைநலம், பூட்கை யோர்க்கே!

- 1974