பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

137

சேர்க்கின்ற வேற்றுமை பற்பல; நம்மினம் செய்த கொடுமைகள் பற்பல! - தீமை

வேர்க்கின்ற உள்ளங்கள் பற்பல்! கூசிடும்

வெட்டிப் பொறாமைகள் பற்பல! ஆர்க்கின்ற நூல்களால் என்னபயன்? கோடி அறங்கள் முழக்கிடும் நூல்களேன்? - நாம் யார்க்கவை சொல்லத் துடித்திடுவோம்? நம்மை யாருக்கிங் கே.விலை போக்குவோம்? . .

'சாதிப் புழுக்கள் நெளிந்திடு மோர்மொத்தைச் சாணித் திரளையாய் வாழ்கையில் - நாம் ஒதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்;உல

கோருக் குரைக்கத் துடிக்கிறோம்!

காதுயிர்ப் பற்றசெ விடர்களாய், இரு கண்களி லாத குருடராய் - நில - வீதி யுலாவரப் பார்த்திடு வோம்! என்ன வேட்கையில் இங்ங்ணம் செய்குவோம்?

முன்னம் பிறந்தவர் என்பதனால் உயர் மூதுரை சொல்லத் துடிக்கிறோம் - எனில் சின்னஞ் சிறிய்ராய் வாழ்ந்திடு வோம்;மனச் சிறுமையி னால்புழு வர்கிறோம்! இன்னும் நினைக்க மறுத்திடு வோம்:உல கேசும் படிபல பேசுவோம்! - நறுங், கன்னல் மொழித்தமிழ்த் தாயினமே, சாதிக் காற்றில் கரைந்துயிர் சாய்வதோ?.

- 1974