பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$40

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

ஒங்குத மிழ்ப்புகழ் நல்லினத்தை விட - உற்றார் தொகையும் மிகப்பெரிதோ? - துயர் தேங்கு மனத்துடன் நீணிலம் யாங்கனும் தேடிப் பிறர்நிலம் ஓடிவிட்டார்! - பீடுநி றைதமிழ் நாட்டை விட, நம்மைப் பெற்றவர் ஆளும், மனைபெரிதோ? - பெருங் காடும்,ம லையும் தி லங்களும் பூமலர்க் காவும் விளங்கிடக் காண்கிலிரோ? மாகுன்றத் தோளால், தமிழ்நலங் காத்தலின் மனைவியின் நல்லுற(வு) ஆங்கினிதோ? - போரில் போகின்ற நல்லுயிர் செந்தமிழ் நூலொன்றைப் புரந்ததெனில் இன்பம்வேறும் உண்டோ? கொல்லிம லைதரு தேன்தமிழ் இன்பினும் குழந்தைகள் இன்பம் மிகப்பெரிதோ? - ஒரு சொல்லில் தொடரில் இயங்கிடும் பாக்களில் சொக்கும் இன்பம் மக்கள் பாலுளதோ? வீரத்த மிழினம் மாய்ந்தகதை யெண்ணி வெம்புகிறேன்; உயிர் மங்குகிறேன்? - ஒரு சேரத்த மிழர்எ ழுந்துவிட்டால் - பழஞ் செந்தமிழ்த் தாய்நலங் காண்கிலளோ? தோய்துயர் தூவிய கொத்தடிமை யின்னுந் தொலையாப் பெரும்பகை யாவையுமே - தமிழ்த் தாய்தரும் பிள்ளைகள் தோள்களன்றோ, வந்து தாங்கி யழித்திடல் வேண்டுமிங்கே! வீரம்சி லிர்த்திடும் தோளெழுவீர்; பெரும் வெற்பு மலைந்திடும் போர் புரிவீர்! - தமிழ் ஈரம்க சிந்திடும் நெஞ்சங்களே! பண்டை ஏற்றம் புதுக்கிட வாருங்க்ளே! - - 1975