பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழுக்குக் கேடுகள் செய்யும் - இழி 8 தாள்களை நூல்களைத் தடைசெயக் கேட்போம்! அமைவுடன் ஒப்பில ராயின் - உள்ள

அனைத்தையும் வாரி நெருப்பினில் தீய்ப்போம்!

விளம்பரப் பலகையில் காணும் - பல 9 வேற்று மொழியினை மாற்றிநந் தமிழில் வளம்பட எழுதிடக் கேட்போம்! - ஒத்து

வரவில்லை என்றாலோ புறம்பெயர்த் தெறிவோம்!

வானொலி யில்தமிழ் வீழ்ச்சி - பல 10 வாண்டுகள் தொடர்ச்சியாய்ச் செய்திடும் சூழ்ச்சி, ஏனென முன்சென்று கேட்கும் - வீர இளைஞர்கள் சிலர்வரின் அப்போதே தோற்கும்!

தப்புகள் ஊழல்கள் கேட்போம் - நல்ல 1 ; தரங்கெட்ட வாணிகம் புறங்கெடச் செய்வோம்! - துப்புகள் அரசுக்குத் தருவோம்! - உயர் தோதுகள் செய்திட ஏதுகள் சொல்வோம்!

தீமையை முன்னின்று தீய்ப்போம்! - ஊர்த் 12 திருடர்கள் பலரஞ்சும் படி, தட்டிக் கேட்போம்! ஊமைகள் ஏழையர்க் கண்டே - பல -

உண்மைகள் கூறி உயர்ந்திட வைப்போம்!

கட்சிகள் சாதிகள் இன்றி - நல்ல #3 கருத்தொடு பொதுநலம் கருதி நடக்கும் அச்சமில் லாதஉள் ளங்கள் - ஒர்

ஆயிரம் இருந்திடில் அனைத்தும் நடக்கும்!

புத்தமிழ் நாடுகாண் போரே! - ஒரு 14 புரட்சிசெய் தேநலம் புதுக்கிடு வீரே! தத்திரி கிடதமி தோம்தோம் - தமி தாந்திமி கிடதிமி தரிகிட தோம்தோம்!

- 1975

449