பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

191

வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர் ! வளந்தரு குறிஞ்சியில் காதலை உணர்ந்தவர் ! தேனுமிழ் முல்லையை மருதம் நெய்தலைத் தீர ஆய்ந்துநல் இல்லறம் வகுத்தவர் ! கான்தரு பொருளையும் கழனியும் கண்டவர் ! கடலின் பரப்பையும் கடந்தயல் சென்றவர்! ஏன், தம்பி தெரியுமா? - இவர்கள் தமிழர்கள்:

என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

கல்லைக் கல்லொடு மோதிய கனப்பினர் 1 காய்ச்சி இரும்பினை உருக்கிடக் கற்றவர் !. சொல்லைச் சொல்லொடும் பொருத்தி மொழியெனச் சுடர்விடும் உணர்வினுக் குருவம் வரைந்தவர் ! வில்லைப் புலியினைக் கயலைக் கொடியினில் வெள்ளைப் பணிமலைத் தலையில் பொறித்தவர் ! எல்லைப் புகழினர் - இவர்கள் தமிழர்கள்! என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்:

தொன்று தொட்ட பெருமையின் தோன்றல்கள்! தோல்வி என்பதே தோன்றிடா வீரர்கள் ! கன்று முட்டிய பாலைக் குடிப்பினும் காதலில், வீரத்தில் எச்சில், கா னாதவர் ! குன்றையும் மலையையும் கொடையாய் வழங்கியர்! கோடி இலக்கிய இலக்கணம் கண்டவர் ! என்றோ பிறந்தவர் ! - இவர்கள் தமிழர்கள்!

என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

காற்றையும் கையினிற் பிடித்துப் பழகியர்! கல்லையும் கூழ்போல் கரைத்துக் குடிப்பவர் ! ஆற்றையும் வளைத்தனை கட்டிப் பாய்ச்சியோர் ! அண்ட வெளிக்கதிர் மண்டிலம் அளந்தவர் ! கூற்றையும் எதிர்த்தவர் கொள்கை வளர்த்தவர் ! கூர்தல் அறத்தையும் உயிரையும் உணர்ந்தவர் ! ஏற்றமென் சொல்லுவேன்? - இவர்கள் தமிழர்கள்! என்னினும் என்ன, இன் றிவர்கள் அடிமைகள்!

- 1983