பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. 87.

88.

89,

90.

97.

93.

94.

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

வந்ததால், அவரும் தம் கணவர் அருகிருக்க விரும்புகின்றார் எனும்

செய்தியும் வந்தது. தம் பொறுப்பில் நித்தலின்பனார் விடுதலையாகலாம்

எனினும் அவர் வெளியேற மறுத்துச் சிறையிருந்தார். ஆயினும் இரு செய்திகளாலும் இரவு நேரங்களில் அவர் மனம் சிறிது துயரங்கொண்டு வருந்தியது. அக்கால் அவருடனிருந்த ஆசிரியர் அவரைத் தேற்றுமுகத்தான் எழுதிய இரு பாடல்களுள் இதுவும் ஒன்று. மற்றது அடுத்துள்ள பாடல். 85ஆம் பாடல் குறிப்புரையைப் பார்க்க

தொண்டு செய்யப் பகுகின்றவர்கள். எந்த வகைத் துன்பத்திற்கும் ஈடுகொடுப்பவர்களாக இருத்தல் வேண்டும். இழிவையோ, பழியையோ

பொருட்படுத்தக் கூடாது. கொண்ட கொள்கையில் நெகிழ்ச்சியில்லாமல்

ஈடுபடுவோனே இறுதியில் முயற்சியில் வெற்றி பெறுகிறான்.

'எனக்கென எதுவுமில்லை இந்த இனங்கெட்ட் தமிழனின் நில்ை தவிர என்று கசிந்துருகுகிறார் ஆசிரியர். என்ன சொன்னாலும் எவர் சொன்னாலும் இந்தத் தமிழன் என்றைக்கும் உண்மை உண்ர்ந்து உருப்படமாட்டான் என்பது தெரியும். ஆனாலும் இவனை இப்படியே விட்டுவிடக்கூடாது. ஏதாவது முயற்சி செய்தே ஆகல் வேண்டும் என்று உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்.

தமிழர்களே என்னைத் தாழ்த்தினும் தமிழர்களுக்கே உழைப்பது என் பெரும் கொள்கை என்கின்றார் ஆசிரியர், தமிழர்கள் நோயாளிகளாம்;

அவர்களுக்குத் தொண்டுசெய்யப் புகுவோர் மருத்துவராக இருந்து பணி செய்ய வேண்டும்; நோயாளிகளை மருத்துவர் வெறுக்கலாமா? என்று

கேட்கிறது இப்பாட்டு, தமிழினத்தை மாற்றியமைக்க ஓர் ஆயிரம்பேர் இருந்தால் போதும் என்று

அறைகூவல் விடுக்கிறது இப்பாடல்.

பொதுத்தொண்டு செய்ய எல்லாரும் முன்வருகின்றார்கள், இக் காலத்தில். ஆனால் உண்மையான பொதுத் தொண்டர்கள் மிகவும் குறைவு. இக்கருத்தை உணர்த்துகிறது இப்பாடல். -

தலைவர்கள் எல்லாம் தவறு.செய்துகொண்டு அத்தவற்றுக்குக் கரணியமாக

மக்களைச் சுட்டி உரைக்கின்றது எவ்வளவு பேதைமை என்கிறது

இப்பாட்டு. இன்றைய தமிழனின் இழிந்த நிலையைத் தெள்ளத்தெளிவாகப் பிடித்த

படப்பிடிப்பு இது.

95 இன்றைய தமிழ்நாட்டின் சொல்லோவியம் இது

96

தம்மினத்தாரே தம்ம்ை அழிக்கினும் தம்கொள்கை என்றும் மாறாது

என்கின்றார் ஆசிரியர்