பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

97. தமிழர் உலக நலங் கருதுவது இருக்கட்டும் முதற்கண் தம் இனநலத்தைத்

தாமே காத்துக்கொள்ளட்டும் என்கிறது இது. - '

98. ஆசிரியர் 1976-ஆம் ஆண்டு முழுவதும் நெருக்கடி நிலைக் காலத்தில் சிறையிலிருந்துவிட்டு 1977 தொடக்கத்தில் வெளிவந்தபின் எழுதிய முதல் பாடல் இது. சிறைக்கதவு திறந்ததை, மீண்டும் தம் தொண்டு தொடர்ந்ததாக, இதில் உறுதிப்படுத்துகிறார், ஆசிரியர்.

99. பழந்தமிழினம் இன்னும் மறந்துவிடாத சில இழிவுகள் இந்தப் பாட்டில் பட்டியலிட்டுக் காட்டப் பெறுகின்றன. - ... * * -

100. சோற்றுக்காக வாழும் அடிமை வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு உரிமை வாழ்க்கைக்கு வரும்படி இளைஞர்களுக்கும், புலவர்களுக்கும் அழைப்பு விடுகிறது இப்பாட்டு. - . . * . . . 101. எல்லாரும் மக்களுக்கு உழைக்கிறோம் என்கின்றார். எல்லாரும் தாம் நடப்பதே சரி என்று கூறுகின்றார். எல்லாக் கட்சிகளும் தம் கட்சியே உண்மைக்கட்சி என்று விளம்பரம் செய்கின்றன. இவற்றுள் எது உண்மை என்பதை எவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது? - 102.தமிழன் தன் இனக் கவலையற்று இழிந்திருக்கும் நிலைகண்டு வருந்தி

எழுதியது. - 103. ஆசிரியரவர்கள் இலங்கை சென்று வந்தபின், தமிழகத் தமிழர்களின்

ஏமாளித்தனத்தை எண்ணி இடித்துரைத்துப் பாடியது இப் பாடல்.

104. சொன்ன சொற்களைச் செய்திடாதவர் எனினும், நன்றி கொன்றவர் எனினும் என்ன செய்குவது தமிழ்நல உண்மையால் இவர்களைத் தேர்வீரே! என்று 1979ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வினரைத் தேர்வு செய்யச் சொல்லிய பாடல் இது. - - -

105. தமிழர்தம் பண்டைய சிறப்புகளையும், இக்கால இழிவுகளையும் எடுத்துரைத்து நல்வாழ்வு பெற்று உயர்வாயோ-எனக் கேள்வி யெழுப்புகிறது இப்பாடல். - 106. தமிழர்களின் அடிமை நிலையை வெளிப்படுத்திச் செயற்பட் வேண்டிய செய்தித்தாள், அரசியற்காரர்களின் ஆளுமைப் போக்குகளால் எவ்வகைத் தொண்டும் பயனளிக்காது போய்விடும் என்பதைச் சுட்டிய பாடல் இது.

107. அரசியற்காரர்களும், பேச்சாளர்களும் தமிழினத்தையும், தமிழையும் எந்த அளவு நலிவுபடுத்துகிறார்கள் என்பதை விளக்குவதோடு, அதை மறுத்துத் தமிழர் நலங்காக்கச் செயற்பட வேண்டியதையும் வலியுறுத்துகிற பாடல்.

108. தினமணிக் கதிர்- இதழின் அன்றைய ஆசிரியர் பார்த்தசாரதி அவ்விதழை ஒவ்வொரு சாதிக்குமான சிறப்பிதழாகத் தொடர்ந்து கொண்டுவந்ததைக் கண்டித்தும், அடிமைத் தமிழர்க்கு அதை உணர்த்திப் பரட்சிக்கு வித்திட அழைப்பு விடுத்தும் இப்பாடல் அமைந்துள்ளது.

-உங்