பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

207

ஊக்கம் இழக்க வேண்டாம்!

ஊக்க மிழக்க வேண்டாம்!-உள்ள உறுதி குலைய வேண்டாம்! ஆக்கம் வந்து சேரும்;-நம் அனைத்துத் துயரும் தீரும்! . உண்மை உணர்ந்த தொண்டர்-உடன் உழைக்க வருதல் வேண்டும்! திண்மை யுள்ள பேர்கள்-ஒன்று திரண்டு கூடல் வேண்டும்! பத்துப் பேர்கள் ஊர்க்கு-ஒரு பண்ணை உழவு போல ஒத்து ழைக்க வந்தால்-விரைந்(து) ஊரைத் திரட்ட முடியும் ! சந்தை கூடும் நாளில்-நாற் சாலை கூடும் இடத்தில் மந்தை மந்தை யாக-ஊர் மக்கள் திரளும் போதில், கருத்தை விளக்கிப் பேசி-நல்ல காட்சி அமைத்து நடித்துத் - திருத்தும் முயற்சி செய்தால்-மக்கள் தீமை உணர்ந்து கொள்வார்! உழைப்பு மிகவும் வேண்டும்!-நம்மை ஊர்ம திக்க வேண்டும்!

பிழைப்ப தற்குத் தொண்டை-ஒரு பேறென் றெண்ண் லாமோ?

மக்கட் கிழிவு செய்தார்-இம் மண்ணை ஆள வந்தார்! ஒக்க அவரை வீழ்த்தி-நலம் ஊருக் காக்க வந்தோம்! பாட்டும் உரையும் கூறிப்-பெறும் பயனை எடுத்துக் காட்டி, நாட்டும் தொண்டில் மக்கள்-பொது நலத்தை உணர வைப்போம்!