பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

208

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

சாதி இழிவு சொல்லி-மதச் சழக்கை விளக்கிப் பேசி, ஓதி உணர்த்த வேண்டும்!-மக்கட் குண்மை கூற வேண்டும்:

- 1987

புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்குக!

வான ளாவிய செந்தமிழ் வளர்குலம் வறுமையும் கீழ்மையும் அடிமையும் உற்றதால் கூன ளாவியும் குறுகியும் சிதைந்துமோர் குருட்டுச் செவிடனாய்ப் பெருநடை தளர்ந்ததே! மான மிலாததாய் மற்றவர் முன்னில்ை மண்டி யிட்டுயிர் வாழவும் துணிந்ததே! ஆன எழுச்சியோ டொன்றி இயங்கினால் அற்றைப் பெருமையும் சிறப்பும் ஆகுமே!

பூட்டிய இருப்புத் தொடரி தெறித்திடப் புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்கினால் கூட்டை யுடைத்தரி மாவும் வெளிப்படும் கொள்கை போலவே உரிமையும் புலப்படும்! நீட்டிய உறக்கம் களைந்திங் கெழுகவே நீணிலம் எங்கணும் வாழ்ந்திடு தமிழினம்! ஈட்டிய பெரும் பொருள் செல்வர் ஈகுக!. இளைஞர் கூட்டமும் எழுந்துலா வருகவே:

- 1988