பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

209

மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு முகிழ்ப்பதில்லை!

மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு முகிழ்ப்பதில்லை; வலுப்பதில்லை; இயங்குவதும் இல்லை என்க! | ‘. . r முன்னோர்தம் வரலாற்றைப் பெருமைகளை உணராதார் முனைந்தெழுந்து நிற்பதுவும் முடியா தென்க! : - - பழியுணர்வு வடவர்களோ தமிழினத்தை வீழ்த்துதற்குப் படைசேர்த்து நம்வலிவைப் பாழ்செய் கின்றார்! * . . . . . . பதைப்பில்ல்ை; உணர்வில்லை; தமிழரிடம்! பங்காளிச் சண்டைகளும் வலுப்பெற்றுப் பகைகொள் கின்றார்! விழியுணர்வும் செவியுணர்வும் மனவுணர்வும் இல்லாத ஏழையர்கள் உரிமைபெற - விழிப்ப தென்றோ? - விழித்தவரோ அடிவருடிப் பிழைக்கின்றார்: வேற்றுவர்பால் இனங்காட்டிக் கொடுக்கின்ற வீன ரானார் : இழிவுணர்வும் கதையுணர்வும் பொழுதுபோக் கிடும்உணர்வும் எழுந்துநின்றே இனவுணர்வைச் சிதைக்கும் இங்கே! - - - ஏமாறும் தமிழரிடை இணக்கவுணர் வெழுந்துசெயல் தோன்றியினம் போராடிச் செழிப்ப தெங்கே?

- 1988