பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

211

சோற்றில் நனைந்தனரே-அட, தொன்மைத் தமிழ்மக்களே!

தட்டுத் தடுமாறி-உயிர் தள்ளாடித் தள்ளாடி எந்தமிழ்த் தாயினை முட்டுக் கொடுத்தேற்றி-மலை முகட்டினில் வைத்திட - நாளுந் துடிக்கிறேன்! கட்டுக் குலைந்ததடா-உடல்! கால்களும் கைகளும் சோர்வுற் றிளைத்தன! துட்டுக் கலைந்தனரே!-பகைச் சோற்றில் நனைந்தனரே!-அட, தொன்மைத் தமிழ்மக்களே!

மறமும் குலைந்தவராய்-தன் மானம் இழந்தவராய், மதத்தினில் சாதியில் திறமும் குறைந்தவராய்-பல தில்லுகள் முல்லுகள் செய்பவ ராய், நல்ல அறமும் கை விட்டவராய்-இழி ஆடலில் பாடலில் - ஆழ்ந்தவ ராய், பல . நிறமாறும் ஓந்தியராய்-பகை நெட்டடி வீழ்ந்தனரே-அட, நேயத் தமிழ்மக்களே!

- 1988