பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

227

அடிமை மீட்குவோம்!

பாடலில் உரையினில் பனித்த சொற்களில் ஈடறும் நறுந்தமிழ் எடுத்துக் கூறினோம் ! கூடுவ தில்லை, நம் தமிழினம்; ஆங்கொரு பீடுறுங் கொள்கையிற் பிணைவதும் இல்லையே!

நூற்றுக் கணக்கினில் மேடைகள் அமைத்தே ஆற்றிய உரைகளுக் களவுகள் இல்லையே! ஏற்றமும் கண்டிலர் எம்மினத் தமிழர்கள்! மாற்றமும் ஆங்கவர் மனத்தினில் இல்லையே!

நாற்பான் ஆண்டுகள் நயத்தொடும் உளத்தொடும் நோற்பார் போல் நொடி நுடங்கலு மின்றியே ஏற்பார் ஏற்பார்-என் றெதிர்பார்த் திருந்தோம்! மேற்பார் வையுமிலை; மேன்மையும் இல்லையே!

இந்திரா இறந்திடில் இவனும் இறக்கிறான்; இந்திரா மகன்கொலை எய்திடில் சாகிறான்; நந்திறல் அறிகிலான்; நாயமும் தெரிகிலான்; நொந்தே மடிகிறான்; நோய் - கடும் அடிமையே!