பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

அற்றைப் புகழ்நலன்கள் அற்றனவென் ஆமாறு வெற்றுப் புலவோரும் வெய்ய கொடுவினையும் கற்றுப் பயன்கொளுவாக் கல்வி வறல்முறையுஞ் சுற்றிச் சுழற்றுகின்ற சாதிச் சுழல்வளியும் இற்றைத் தமிழகத்தில் எங்கணுஞ் சீறியெழும் புற்றரவம் போலப் புறப்பட்டுச் சூழ்வனகாண்!.

எற்றே இனியே இவைபோகி யாமடியேம் நெற்றுப் பயிர்ப்போல் நினைவு முதிர்வதுவே சீறி வடமருங்கில் செந்தமிழை மேய்வரும் ஏறி இறங்கு குரல் இந்தி எனுமொழியும் ஆறி யடங்கிநின்ற ஆரியமும் ஆங்கிலமும் கூறிட்டுச் சாய்க்குங் கொழுமைத் தமிழுணர்வை ஏறிட்டுப் பார்த்தே எழுந்துயர்ந்த வன்குரலாய் வீறிட்டுப் போருமிட்டு வேலியிட்டுக் காவாய் மாறிட்டு நம்முடைய, மானந் தனைவிட்டுச் சோறிட்டார் தாம் போற்றிச் சோர்ந்தழிந்து போவதுவோ!

- 1955