பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

உருவொன்று திருவாறு!

கால மாமுகில் கடந்து லாவருங் கதிரினைத் திருக் குறளினை, ஏறு மாறிலக் கணமு ரைத்ததொல் காப்பி யன்திரு நினைவினை கூல வாணிகன் சாத்த னை இளங் கோவினை, ஒரு கம்பனை . . . மேலு மேலும் நினைந் தி, டில்தமிழ் மிளர்வ தன்றி மறக்குமோ?

கோல மாமலை சென்று வென்றவன் கொடியி னைத் தமிழ் நெறியினை நீல மாக்கடல் கடந்து வாணிகம் நிகழ்த்திய நெடுஞ் சிறப்பினை ஞால மெங்கணு மாட்சி யேற்றிய நந்த மிழ்த்தனி மொழியினை நூலு ரைப்பதை எண்ணி டில் உளம்

உவப்ப தன்றிம றப்பரோ?

பாவ லர்ப் பெரும் பெயர்க ளைத்தீம் பரண கபிலர்நக் கீரனை மேவு செந்தமிழ் ஒளவை யை அவர் மெய்மை வாழ்வினை ஒழுங்கினைக் காவ லாற்றிய தகையினைத் தமிழ்க் கழகம் நாட்டிய அரசரை ஆவல் சேர நினைத் தவர்தமூச் சகலுங் காலும றப்பரோ?

ஊன்று செந்தமிழ் ஒழுங்கினை, அதன் உயர்வு விளங்கிடும் வாழ்வினைச் சான்று கூறிடும் பாட்டி னைச்சீர் சாலுந் தொகையினைக் கணக்கினை ஈன்ற தமிழகப் பேற்றி னை.அவை

எடுத்துப் பேசுமே னாட்டினை

ஆன்ற றறிந்த திறத்தி னாருளம் ஆழ்வ தன்றிம றப்பரோ?

- 1955 (?)