பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

42

உய்வோம்

தமிழ்நாட்டைத் தமிழ்நா டென்னத் தமிழரில் மறுப்பார் தம்மீ • , - துமிழுங்கள் காறி! அன்ன உலுத்தரை உடனே மாய்ப்பீர்! . . . . தமிழ்மக்கள் குடலை உண்டு தமிழர்க்கே தீங்கு செய்யும் . . . . . . தமிழனைத் தமிழன் என்று தவறியும். கூறா தீர்கள். -

தென்னாட்டுப் பணத்தைத் துக்கித் தில்லியார்க் , கனுப்பி விட்டே, . . . . . . . பின்னாட்டம் போடு வாரைப் பேடியென் றுரைப்பீர்! இன்னும் . . . ." சின்னாட்கள் கழித்தன் னாரின் சீட்டினைக் கிழிப்பீர்! ஆகி - , . " . . . . . நன்னாட்டைக் காப்பீர்; காத்து நந்தமிழ் அரசுண் டாக்கீர்! - . . -

நாட்டினைப் பிரித்தல் தீதென் றியம்புவார், தெலுங்கு பேசும் நாட்டினிற் குரிமை தந்த ஞாயமென்? நாமெல் லோரும் கூட்டமிட் டுரைப்ப தென்ன என்பதற்

கெவரும் காணோம்!

ஏட்டினில் எழுதித் தீர்த்தோம்; ஏனென்று கேட்பார் இல்லை!

இந்தியைக் கற்கக் கட்டுப் பாடில்லை என்றார்; ஆனால் இந்தியைப் புகுத்து தற்கே இருந்தநா ணயத்தை மாற்ற, ‘மந்திரி என்பா ரெல்லாம் மடம்பேசி நிற்பார்; அன்னார் - தொந்தியை வளர்ப்ப தற்குத் தமிழினை அடகு வைத்தார்!

வாரீர்