பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

26

இனங்கொல்லி!

எந்தமிழ்க்குப் பிறராலே வருந்தீங்கும். இடர்ப்பாடும் எள்மூக் கென்றால், செந்தமிழர் எனக்கூறிச் செருக்கிடுவார் . செயுந்தீங்கு பறங்கிக் காயாம்! வெந்தழலில் வெந்ததுவும் நீர்வந்து விழுங்கியதும் போக, எஞ்சும் செந்தமிழ்நூற் பெருமையெல்லாம் இவர் விழுங்கிச் செரிக்கின்றார்! இனங்கொல்வாரே!

- 1959

எவ்ரோ அவர் தமிழர்!

காடு புகுந்தவ. ராயினும் பண்டைக் கவின்மறந்தித் . நாடு கடத்தவ ராயினும் இப்பெரு நானிலத்துள் ஒடி யுறைதவ ராயினும் உண்மைத் தமிழ்க்குருதி

ஒடுவ தென்றே யுரைப்பார் எவரோ அவர்தமிழர்!

- 1959